வெறும்கால்வாசிகள்
மின்தட்டுபாடு தமிழகத்தை இருட்டிற்குள் தள்ளியுள்ள சூழலில் ராஜஸ்தானில் ஒரு கிராமம் முழுமையாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்கிறது, இதற்கான உபகரணங்களைத் தயாரிப்பவர்களும், பயன்படுத்துவர்களும் கிராமத்துப் பெண்கள், அவர்களில் எவரும் முறையான கல்வியறிவு பெற்றவர்களில்லை, ஆனால் அவர்களால் எளிதாக சோலார் உபகரணங்களைத் தயாரிக்க முடிகிறது, கூடுதலாக இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் ஆப்ரிக்காவில் உள்ள கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்திருக்கிறார்கள் என்ற தகவலை ஒரு மின்னஞ்சல் வழியாக அறிந்த போது வியப்பாக இருந்தது, எப்படி …