admin

தேவதச்சனுக்கு விருது

தமிழ்நவீன கவிதையின் தனிப்பெரும் ஆளுமையான கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விளக்கு விருது வழங்கப்படுகிறது, அமெரிக்காவில் இருந்து இயங்கும் விளக்கு அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விளக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது, இந்த விருதை நகுலன், விக்ரமாதித்யன், பூமணி. சி.மணி உள்ளிட்ட பல முக்கிய படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள், விருது வழங்கும் விழா ஜனவரியில் நடைபெற உள்ளது தேவதச்சன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். ஆறுமுகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1952இல் பிறந்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற, …

தேவதச்சனுக்கு விருது Read More »

காந்தி

மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர் என்ற தலைப்பில் காந்தி குறித்து நான் பேச இருக்கிறேன் டிசம்பர் 24 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் எனது புத்தக வெளியீட்டுவிழா நடைபெற உள்ளது, அதில் இந்தத் தனிஉரை நடைபெற இருக்கிறது. புத்தரைப் போலவே உலகெங்கும் அறியப்பட்ட மகத்தான ஆளுமை மகாத்மா காந்தி. இருவருமே அயராத பேச்சாளர்கள், சமூகப் போராளிகள், மக்களைத் தேடித் தேடி சந்தித்தவர்கள். காந்தி குறித்து நிறையப் பேசியும், எழுதியுமிருக்கிறார்கள், …

காந்தி Read More »

ஆண்டாளைப் பின்தொடர்வது

மார்கழி மாதத்தில் ஆண்டாளின் பாசுரங்களைக் கேட்பதை விட உன்னதமானது இந்த உலகில் வேறு எதுவுமில்லை, மார்கழியை அவளைப் போல கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. மற்ற மாதங்கள் தங்களைப் பாடமால் விட்டுவிட்டாளே என்று ஆண்டாளிடம் வருத்தம் கொண்டிருக்கும், கொடுத்து வைத்தது மார்கழி மாதம்,  இப்போதெல்லாம் மார்கழியில் பனி அதிகம் பெய்வதில்லை, பூசணிப் பூக்கள் வைத்து கோலமிட்ட வீடுகளைக் காண்பது அரிதாக இருக்கிறது, கிணற்றடியும் ஈரவாளியும் கண்ணில் இருந்து மறைந்து போய்விட்டன, ஆனால் ஆண்டாள் எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிடுகிறாள், தன் பாடலின் வழியே …

ஆண்டாளைப் பின்தொடர்வது Read More »

அழைப்பிதழ்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 24 மாலை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

புத்தக வெளியீடு

உயிர்மை பதிப்பகம் நடத்தும் எனது ஐந்து புதிய நூல்களின் வெளியீட்டு விழா  டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது, இந்த விழாவின் ஒரு பகுதியாக ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையின் நாடகவடிவம் நடைபெற உள்ளது, இதைத் தியேட்டர் லேப் சார்பில் இயக்குபவர் ஜெயராவ். புத்தக வெளியீட்டில்  திரு. R.பாலகிருஷ்ணன் IAS, எஸ்.ஏ.பெருமாள், முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர்.ராமகுருநாதன், கபிலன்வைரமுத்து, …

புத்தக வெளியீடு Read More »

தமிழ்வாசக தளம்

இணையதளத்தில் தமிழ்படைப்புகள் அதிகம் வாசிக்க கிடைப்பதில்லை என்ற குறையைப் போக்கிட புதியதொரு இணையதளம் உருவாகியிருக்கிறது ஒபன் ரீடிங் ரூம் என்ற இந்த இணையதளத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் துப்பறியும் நாவல்களில் இருந்து லா.ச.ராவின் இதழ்கள் வரை நிறைய படைப்புகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன இவற்றை இணையதளத்திற்கு சென்று நேரடியாக வாசிக்கலாம்,  அல்லது  தரவிறக்கம் செய்து கொள்ளலாம் தமிழ் இலக்கிய வாசிப்பினை மேம்படுத்துவதற்கு இது ஒரு அரிய சேவை இதனைச் சாத்தியமாக்கியுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ரமேஷ் சக்ரபாணிக்கும் அவரது தோழமை …

தமிழ்வாசக தளம் Read More »

கோவை இலக்கியச்சந்திப்பு

டிசம்பர் 17ம்தேதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கோவையில் ஒரு இலக்கியச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சந்தித்துப் பேச விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் இந்த நிகழ்வினை தமிழின் முக்கிய ஆளுமையான ஞானி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்கிறார். இடம் : சிபி ஐஏஎஸ் அகாதமி வளாகம், காந்திபுரம், கோவை. கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்க:   ராமச்சந்திரன் 918012638277. டிசம்பர் 18 மாலை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பூமணி அவர்களுக்கு விருதுவழங்கப்படும் நிகழ்வில் பேச இருக்கிறேன், …

கோவை இலக்கியச்சந்திப்பு Read More »

நெருப்பைத்தேடி

நெருப்பை பெண்கள் அளவிற்கு ஆண்கள் நுட்பமாக அறிந்திருக்கவில்லை, ஆணிற்கு நெருப்பு என்பது வியப்பான ஒரு பொருள், அல்லது வெறும்பயன்பாட்டு பொருள் .யாகத்தின் போது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் முன்னமர்ந்து மந்திரஉச்சாடனம் பொங்கி வழிய ஆண் நெருப்பை ஆராதனை செய்கிறான், பெண்களோ நெருப்பை ஸ்நேகப்பூர்வமாகப் பார்க்கிறார்கள், பலவேளைகளில் நெருப்போடு பேசுகிறார்கள், சமையலுக்கு கை கொடுக்கச்சொல்லி கூப்பிடுகிறார்கள், நெருப்பு வராமல் புகை மட்டுமே எழும்போது திட்டுகிறார்கள்.  விளக்கில் எரியும் நெருப்பிற்கும் அடுப்பில் எரியும் நெருப்பிற்கும் உள்ள பேதம் அவர்களுக்கு நன்றாகத் …

நெருப்பைத்தேடி Read More »

அந்தக் காலத்திலே

லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் விருப்பமான கதையிது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, எளிய கதை போல வெளிப்படையாக தோன்றினாலும் அது சுட்டிக்காட்டும் உண்மை மிகவும் ஆழமானது ••• அந்தக் காலத்திலே : லியோ டால்ஸ்டாய் முன்பு ஒருநாள், பள்ளத்தாக்கு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் முட்டை போல் பெரியதாக உருண்டு திரண்டிருந்த பொருள் ஒன்றைக் கண்டெடுத்தனர். இதன் நடுவில் வடுப்போல் பள்ளமாயிருந்ததால், தானிய மணி போலிருந்தது. குழந்தைகளிடம் இதைக் கண்ட …

அந்தக் காலத்திலே Read More »

தென்றல்

வடஅமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் இதழில் எனது நேர்காணல் வெளியாகி உள்ளது அதற்கான இணைப்பு https://tamilonline.com/thendral/