admin

மீன்களோடு பேசத்தெரிந்தவன்

கனவுகளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அதை ஒரு கதையாக்கிவிடுகிறேன், என்று அரிசோனா ட்ரீம்ஸ் படத்தில் எனக்குப் பிடித்தமான ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. 1993ல் வந்த இந்த ஹாலிவுட் படத்தை இன்று வரை பத்துக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன், முக்கியமான காரணம், இதன் கதை சொல்லும் முறை மற்றும் வசனங்கள், பெரும்பான்மையான உரையாடல்கள் மிகுந்த கவித்துவமானவை, எமிர் கஸ்தூரிகாவின் படமது ( Emir Kusturica) முக்கிய வேஷத்தில் ஜானி டீப் மற்றும் ஜெரி லூயிஸ் நடித்திருக்கிறார்கள், அமெரிக்க …

மீன்களோடு பேசத்தெரிந்தவன் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை

எந்தச் சாவி கதவைத் திறக்கப் பயன்படுகிறதோ அதுவே கதவைப் பூட்டவும் பயன்படுகிறது என்று ஒரு யூதநீதிமொழியிருக்கிறது, நாவல்களுக்குள்ளும் அப்படித்தான்  நடைபெறுகிறது எல்லா நாவலினுள்ளும் சில திறப்புகளும் சில முடிச்சுகளும் இருக்கின்றன, நாவலின் கதையை மட்டும் தொடர்ந்து செல்லும் வாசகன் பலவேளைகளில் இந்தச் சாவித்துளையை அடையாளம் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விடுவான்,  அதனால் நாவலின் முழுமையான தரிசனத்தை அவனால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது ஒரு நாவலின் நோக்கம் கதையைச் சொல்வது மாத்திரமில்லை, எழுத்தாளன் கதையின் வழியாக விவாதங்கள். சந்தேகங்கள் அனுமானங்கள். …

தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை Read More »

வரலாறு என்னும் கதை

எடுவர்டோ கலியானோ (Eduardo  Galeano) மிக முக்கியமான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்,  உருகுவேயைச் சேர்ந்தவர், பத்திரிக்கையாளராக துவங்கி முக்கிய வரலாற்றுஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் தனிஇடம் கொண்டவர் இவரது Mirrors: Stories of Almost Everyone படித்திருக்கிறேன், கலியானோவின் எழுத்து மற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டது, நேரடியான அரசியல் ஈடுபாடும் இடதுசாரிக் கருத்தியலும் கொண்ட எழுத்தாளர் இவர், போர்ஹெஸ், மார்க்வெஸ், ப்யூந்தஸ். இசபெல் ஆலெண்டே, கொர்த்தசார், லோசா,  நெரூதா. ஆக்டோவியா பாஸ் என்று பல லத்தீன் அமெரிக்க …

வரலாறு என்னும் கதை Read More »

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை

சிலவேளைகளில் நான் ஸ்பூனைத் தவறவிட்டுவிடுகிறேன் என்றான் சிறுவன் நானும் அப்படிச் செய்வதுண்டு என்றார் கிழவர் சிறுவன் முணுமுணுத்தான் டவுசரிலே மூத்திரம் பெய்துவிடுகிறேன், நானும் கூட அப்படித்தான் என்று சிரித்தார் கிழவர் நான் அடிக்கடி அழுகிறேன் என்றான் சிறுவன் நானும் அப்படியே செய்கிறேன் என்று தலையாட்டினார் கிழவர் எல்லாவற்றையும்விட மோசம் , பெரியவர்கள் என்பிரச்சனைகளைக் கண்டுகொள்வதேயில்லை என்றான் சிறுவன் சுருக்கம்விழுந்த கைகளின் இதமான அரவணைப்பை அச்சிறுவன் உணர்ந்தான் நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றார் அந்தச் சிறிய …

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை Read More »

வான்கோவின் இரவு

People use art to explain each other their feelings –  Leo Tolstoy. எனக்கு வான்கோவின் ஒவியங்களை மிகவும் பிடிக்கும், நவீன ஒவியத்தின் தனிப்பெரும் கலைஞன் வான்கோ, அவரது  புகழ்பெற்ற ஒவியமான நட்சத்திரங்களோடான இரவு என்ற ஒவியத்தைப் பாருங்கள் தைல வண்ணத்தில் 29 x 36  அளவில் வரையப்பட்ட ஒவியமது ,இன்று நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் உள்ளது 1889ம் ஆண்டு இந்த ஒவியத்தை வரையும் போது வான்கோ சென்ட் ரெமி என்ற இடத்தில் உள்ள …

வான்கோவின் இரவு Read More »

பிடாரன்

நான் கதைவசனம் எழுதி அருண்பிரசாத் இயக்கியுள்ள குறும்படமான பிடாரன் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது,  இக்குறும்படம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது, https://youtu.be/i2h75PBHirg **

கண்ணதாசன் விருது

தாகூர் விருதினைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு விருது கிடைத்திருக்கிறது இது கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் ஆண்டு தோறும் வழங்கி வரும் கண்ணதாசன் விருதாகும், இந்த விருது வழங்கும் விழா ஜுன் 26.06.2011 ஞாயிறன்று கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நடைபெற உள்ளது, *** கண்ணதாசன் விருதுகள்-2011 குறித்த அறிவிப்பு இது: கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் …

கண்ணதாசன் விருது Read More »

துயில் விமர்சனம்

புத்தகம் பேசுது, மே இதழில் வெளியாகி உள்ள துயில் நாவல் பற்றிய விமர்சனம் ** துயில் : நோய்மையின் தரிசனம் – பி.வசந்தா தமிழ் வாசகத் தளத்திற்கு நல்ல நாவல்கள் அபூர்வமாகவே வெளிவருகின்றன. இருண்மை, புரியாமொழி, கட்டுரைத்தனம், எனக் கதையின்றி வரும் நாவல்கள் வாசகரைச் சித்ரவதை செய்கின்றன. வாழ்க்கையைப்பற்றிய புரிதல் ஏற்படுத்தும் நாவல்கள் மிகவும் குறைந்துவிட்டன. இந்தக் களேபரங்களிலிருந்து விலகி சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், நோயாளிகளின் வாழ்வையும் முன்வைத்துச் சமூகத்திற்கு யதார்த்தமான நற்செய்திகளைச் சொல்லும் நாவலாய் …

துயில் விமர்சனம் Read More »

தி எக்னாமிக் டைம்ஸ்

நேற்றைய  தி எக்னாமிக் டைம்ஸில் தாகூர் விருது பற்றிய எனது நேர்காணலுடன் இந்தக் கட்டுரை வெளியாகி உள்ளது Link : https://economictimes.indiatimes.com/articleshow/8285164.cms?prtpage=1 ***

துயில் : ஒரு பார்வை

எனது நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான டாக்டர் ராமானுஜம் திருநெல்வேலியில் உளவியல் மருத்துவராகப் பணியாற்றுகிறார், அவர் எனது துயில் நாவல் பற்றி எழுதிய விமர்சனம் •• துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ …

துயில் : ஒரு பார்வை Read More »