admin

கார்க்கியின் இசெர்கீல்

I never meet my lovers after I had left them. It would be bad to meet them – like meeting the dead – கார்க்கி மாக்சிம் கார்க்கியின் (Maxim Gorky) தாய் நாவலை விடவும் அவரது சிறுகதைகளை எனக்கு அதிகம் பிடிக்கும். கார்க்கியின் வாழ்க்கை ஆலிவர் ஸ்டுவிட் கதாபாத்திரத்தினைப் போன்றது. டிக்கன்ஸின் நாவலில் வரும் அந்த சிறுவனைப் போலவே தான் வறுமையோடு போராடியபடி இளமையில் இருந்ததாக கார்க்கியே குறிப்பிடுகிறார் …

கார்க்கியின் இசெர்கீல் Read More »

திருத்தம்

உடற்கூறு வண்ணம் பாடலை எழுதியது அருணகிரி நாதர் இல்லை பட்டினத்தார் என்று நண்பர் கார்த்திகை பாண்டியன் சுட்டிக்காட்டி உள்ளார், என்னிடம் உள்ள பாவலர் சரித்திர தீபகம் அதை அருணகிரி நாதர் என்று அடையாளப்படுத்தியிருந்ததால் உருவான தவறு அது, மன்னிக்கவும் அருணகிரி நாதர் பற்றிய எனது அவதானிப்பு இந்த ஒருபாடலின் வழியாக மட்டும் உருவானதில்லை,  அவரது திருப்புகழ் பற்றிய உயர்வெண்ணம் அப்படியே தானிருக்கிறது அது  போலவே பட்டினத்தாரின்  உடற்கூறு வண்ணம் மீதான வியப்பும் தீராமலேயிருக்கிறது இதன் ஆங்கில மொழியாக்கம் …

திருத்தம் Read More »

உடல்கூறு வண்ணம்

உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் எழுதிய பாடல், பிறப்பு முதல் இறப்பு வரையான மனிதனின் அத்தனை செயல்களும் ஒரே பாடலில் உள்ளது, உன்னதமான இந்தப் பாடல் வாழ்வின் நிலையாமையை ஒரே பாடலில் புரிய வைத்துவிடுகிறது ••• உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் ஒரு மடமாது ஒருவனும் ஆகி, இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி, உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து,                                                 2 பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து, திரண்டு, …

உடல்கூறு வண்ணம் Read More »

விருது ஏற்புரை

மே 5ம் நாள் மும்பையில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் எனக்குத் தாகூர் விருது வழங்கப்பட்டது, இந்த விருதினை மராத்தியின் முக்கிய எழுத்தாளரும் இந்திய திட்டகமிஷன் உறுப்பினருமான நரேந்திர ஜாதவ் வழங்கினார், இவர் தாகூர் குறித்து முக்கியமான புத்தகங்களை மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார், தாகூரின் முக்கிய படைப்புகளை மராத்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர்களுடன் கொரிய அரசின் பன்னாட்டுஉறவுச் செயலர்  Seo-hang Lee, சாகித்ய அகாதமியின் செயலாளர் திரு, அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி. பிரபலநாடக நடிகர் பரூக் ஷேக், நோபல் …

விருது ஏற்புரை Read More »

மும்பைத் தமிழ்சங்க விழா

தாகூர் விருது பெறுவதற்காக மே ஐந்தாம் தேதி காலை மும்பை வருகிறேன், விழா தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் நடைபெற உள்ளது மும்பையில் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை இருக்கிறேன் மே 8ம் தேதி மும்பை தமிழ்சங்கம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது சியோன் தமிழ் சங்கத்தில் காலை பத்துமணிக்கு  எப்போதுமிருக்கும் கதை – தமிழ் இலக்கியத்தின் மரபும் நவீனமும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன் மும்பையில் உள்ள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் …

மும்பைத் தமிழ்சங்க விழா Read More »

புத்தனாவது சுலபம்

சிறுகதை அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். …

புத்தனாவது சுலபம் Read More »

என்றும் சுஜாதா

இன்றுள்ள இளம்வாசகருக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தும் விதமாக நான் அவரது படைப்புகளில் இருந்து தேர்வு செய்து என்றும் சுஜாதா என்ற புத்தகம் ஒன்றினைத் தொகுத்திருக்கிறேன் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சிறந்ததைத் தேர்வு செய்து தனியே  ரீடர் என்று  தொகைநூலாகக் கொண்டுவருவது உலகெங்கும் ஒரு மரபாக உள்ளது, அதிலிருந்து மாறுபட்டு ஒரு எழுத்தாளரின் ஆளுமையை, பன்முகத்தன்மையை முதன்மைப்படுத்தும் விதமாக நான் இந்தத் தொகைநூலை உருவாக்கியிருக்கிறேன், எழுத்து, வாழ்க்கை, கணிப்பொறி, சினிமா, ஒவியம், விஞ்ஞானம், ஹைக்கூ, புதுக்கவிதை, ஆன்மீகம், …

என்றும் சுஜாதா Read More »

நன்றி

எனக்குத் தாகூர் விருது கிடைத்துள்ளதற்கு நிறைய நண்பர்கள் போனிலும்  மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்தபடியே இருக்கிறார்கள், மூன்று நாளில் 1374 வாழ்த்து மின்னஞ்சல்கள் குவிந்துவிட்டதைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன், தங்களுக்கே இந்த விருதுகிடைத்துள்ளது போல உளமாற மகிழும் நல்ல உள்ளங்களோடு சேர்ந்து செயல்படுவது மிகுந்த சந்தோஷம் தருகிறது, என்மீதும், என் எழுத்தின் மீதும் அன்பு கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த ஒரு வாரகாலமாகவே பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் நேரம் …

நன்றி Read More »

தாகூர் இலக்கிய விருது

இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது எனக்கு கிடைத்துள்ளது, இந்த விருதை கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது, அதைப் பெறுவதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன், இந்த விருது குறித்த அறிவிப்பு ** தாகூர் இலக்கிய விருது மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய …

தாகூர் இலக்கிய விருது Read More »