admin

தலாய் லாமாவின் உரை

எனக்குப் பிடித்தமான தலாய் லாமாவின் உரை, இதைச் சில வருசங்களின் முன்பாக ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார், இன்று வரை அது என் கணிணி முகப்பில் இருந்து கொண்டேயிருக்கிறது •• THE PARADOX OF OUR TIMES-  Dalai Lama we have taller buildings, but shorter tempers Wider freeways, but narrower viewpoints We spend more, but we have less We have bigger houses, but smaller families …

தலாய் லாமாவின் உரை Read More »

மாங்குடி மருதனார்

சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார் , இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில்  விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது, அதைக் காண்பதற்காக நான்கு நாட்களுக்கு முன்பாகச் சென்றிருந்தேன். வெயிலேறிய சாலைகள், நாயோடு முயல் வேட்டைக்கு அலையும் சிறுவர்கள், இரையெடுத்த பாம்பு போல வானில் மெதுவாக நகரும் சூரியன், மேற்கில் அடிவானம் …

மாங்குடி மருதனார் Read More »

சொந்தக்குரல்

அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது. சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். …

சொந்தக்குரல் Read More »

அறிவிப்பு

கடந்த பத்து நாட்களாக  என் பையன்களுடன் கோடைப்பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் புதிதாக எதையும் எழுத இயலவில்லை, இன்று காலையில் தான் சென்னை திரும்பினேன், ஏப்ரல் 13 அன்று எனது பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வாழ்த்து அனுப்பிய இணைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் புழுதியும் வெக்கையும் வேம்பின் நிழலும் மகாமௌனமும்  நிரம்பிய கிராமங்கள் சிறுநகரங்களில் சுற்றியலைந்து திரும்புகையில் இன்னமும் எழுத வேண்டியது நிறைய இருப்பது தெரிகிறது, வெயில் கொதிக்கிறது, தாங்கமுடியவில்லை என்ற பலரின் முணுமுணுப்புக்குரலையும் …

அறிவிப்பு Read More »

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம் இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன் •• …

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம் Read More »

புத்தகங்களை என்ன செய்வது

To add a library to a house is to give that house a soul. Your library is your portrait. – Cicero புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி …

புத்தகங்களை என்ன செய்வது Read More »

உலகம் ததும்பும் ஒசை

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் நோபல் ஏற்புரையில் தான் முதன்முறையாக  தோஜென் (Priest Dogen) என்ற மதகுருவைப்பற்றி விரிவாக அறிந்து கொண்டேன், முன்னதாக அவரது ஒன்றிரண்டு ஜென் கவிதைகளை தொகுப்பில் வாசித்திருந்த போதும் அவர் மீது தனித்த கவனம் குவிந்ததில்லை, பாஷோ தான் எனக்கு மிகவும் நெருக்கமான கவி. ஆனால் கவாபத்தாவின் நோபல் உரை அதுவரையான எனது  ஜென் கவிதைகள் பற்றிய மதிப்பீட்டினை அப்படியே உருமாற்றுவதாக அமைந்தது, கடந்த இருபத்தைந்து வருசங்களில் நோபல் …

உலகம் ததும்பும் ஒசை Read More »