கடந்த பத்து நாட்களாக என் பையன்களுடன் கோடைப்பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் புதிதாக எதையும் எழுத இயலவில்லை, இன்று காலையில் தான் சென்னை திரும்பினேன்,
ஏப்ரல் 13 அன்று எனது பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வாழ்த்து அனுப்பிய இணைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
புழுதியும் வெக்கையும் வேம்பின் நிழலும் மகாமௌனமும் நிரம்பிய கிராமங்கள் சிறுநகரங்களில் சுற்றியலைந்து திரும்புகையில் இன்னமும் எழுத வேண்டியது நிறைய இருப்பது தெரிகிறது,
வெயில் கொதிக்கிறது, தாங்கமுடியவில்லை என்ற பலரின் முணுமுணுப்புக்குரலையும் தாண்டி எனக்குக் கோடை பிடித்தேயிருக்கிறது.
எப்போதும் போலவே கோடையைக் கொண்டாடும் மனநிலையுடன் இருக்கிறேன்,
மே மாதத்தில் கல்கத்தா, நேபாளம். மதுரை. கொடைக்கானல், கேரளா, என இன்னும் நிறைய பயணத்திட்டங்கள் இருக்கின்றன,
ஏப்ரல் 23 24 இரண்டு நாட்கள் திருச்சியில் இருப்பேன்.
**