admin

வேனல்தெரு

சிறுகதை பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை …

வேனல்தெரு Read More »

வழி

 சிறுகதை வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப் டப்பாவும் வலைதுண்டுமாக நந்தவனத்துக்கு குளிக்கப் புறப்பட்டபோது தெரு தூக்கத்தில் மூழ்கியிருந்தது. முப்பதுவருடத் தினப்பழக்கம் இது. சைக்கிள் அவர் யோசனைக்கு இடம் தந்தபடி தானே போய்க்கொண்டிருந்தது. காலையில் கோர்டுக்கு வரப்போகும் சிங்கிகுளம் கொலைகேஸ் பற்றி யோசித்தார். ஒரு தெரு தாண்டும் முன்பு அது கலைந்து …

வழி Read More »

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது – 2

மறுநாள் டக்ளஸ் தன்னிடமிருந்த வானியல் வரைபடங்களைக் கொண்டு காற்றடிக் காலம் துவங்குவதற்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கணித்தான். எழுபத்திமூன்று நாட்கள் மீதமிருந்தன. அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்றபடியே அவனும் தீவுவாசிகளைப் போலவே பகலில் மரநிழலில் படுத்துக் கிடக்கத் துவங்கினான். ஆனால் அவனது துப்பாக்கி வீரர்களால் அப்படியிருக்க முடியவில்லை. தன்னோடு பேச மறுப்பவர்களுடன் சண்டையிடவும் சிலவேளைகளில் அவர்களைத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தவும் முயற்சித்தார்கள். ஒரு துப்பாக்கி வீரன் பட்டங்கட்டி வீட்டுப் பெண் ஒருத்தியின் உதடை அறுத்து எடுத்து …

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது – 2 Read More »

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது

சிறுகதை அவர்கள் தன்னை வெறுக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் டக்ளஸ் பிராங் உணர்ந்து கொண்டேயிருந்தான். திரிசடைத் தீவு முத்து குளிப்பதற்குப் பிரசித்தி பெற்றது. அங்கு விளையும் முத்துகள் குழந்தைகளின் கண்களைப் போல வசீகரமும் மென்னொளியும் கொண்டவை என்றும் அது போன்ற ஒளிரும் முத்துகள் மன்னார் வளைகுடா பகுதியில் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்றும் கடற்வணிகர்கள் தெரிவித்தனர். அதனினும் கூடுதலாக ஒரு காரணமிருந்தது. அது,  விக்டோரியா மகாராணியின் கவனம் பெறவேண்டுமானால் திரிசடை முத்துகளில் ஒன்று கைவசம் இருந்தால் கூடப் …

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது Read More »

அறிவிப்பு

புதிய வாசகர்களின் விருப்பத்திற்காக இணையத்தில் வேறு வேறு தளங்களில் வாசிக்க கிடைக்கின்ற எனது சிறுகதைகளை  ஒருங்கே தொகுத்துத்  தர முயற்சிக்கிறேன்,  ஏதாவது இணையதளங்களில் எனது சிறுகதைகள் வெளியாகி இருந்தால் எனக்குச் சுட்டிக்காட்டவும் •••

கடக்க முடியாத யாமம்

எனது நாவல் யாமம் குறித்து கவிஞர் சமயவேல் எழுதிய சிறப்பான விமர்சனக்கட்டுரை •• இரவால் கோர்க்கப்பட்ட கதைகள் – சமயவேல்   எஸ்.ராமகிருஷ்ணனின் புதினம் யாமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ஒரு கர்ண பரம்பரைக் கதைகளின் தொகுப்பு என அன்றைய புத்திலக்கியப் பரப்பால் ஒதுக்கப்பட்டது ஞாபகம் வந்தது. எனவேதான் ‘யாமம்’ பற்றிய இந்த எழுத்தாடலை ஒரு வாசகத் தளத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். விதம் விதமாகக் கசியும் இருளுக்குள் ஏராளமான கதைகள் மெல்லிய குரலில் …

கடக்க முடியாத யாமம் Read More »

விருப்பமான கவிதைகள்

எனக்கு விருப்பமான 7 கவிதைகள்  ** தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய் நிற்கிறாள் சிறுமி கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள் சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன அவள் கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்றன வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில் இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள் சொல்லவிரும்பிக் கை அசைத்தாள் சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது கொஞ்சம் புரியவில்லை. …

விருப்பமான கவிதைகள் Read More »

வாசிப்போம் வாருங்கள்

ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய  எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு  சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்,  அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் …

வாசிப்போம் வாருங்கள் Read More »

சில இணைப்புகள்

சாப்ளினின் முதல்படம் சாப்ளின் நடித்த முதல் திரைப்படம், மிக அரிய காணொளி. கீஸ்ட்டன் ஸ்டுடியோதான் ‘மேக்கிங் எ லிவிங்’ திரைப்படத்தைத் தயாரித்தது. Charlie Chaplin in Making a Living (1914) https://www.youtube.com/watch?v=2Mntjb7ShuI’ •• காந்தி பேசுகிறார் மகாத்மா காந்தியின் அரிய காணொளி Mahatma Gandhi Talks- First Indian Talking Movie https://www.youtube.com/watch?v=2GgK_Nq9NLw •• ஷியாம் பெனகலின் நேர்காணல் உரை ஐந்து பகுதிகளாக உள்ள பிரபலத் திரை இயக்குனர் ஷியாம் பெனகலின் விரிவான நேர்காணல், Top …

சில இணைப்புகள் Read More »

ஹரிச்சந்திரா பேக்டரி

  கடந்த இரண்டு மாதங்களுக்குள் 1) Jhing chik jhing.2)Valu3) Vihir 4) Gandh 5) Gho mala asla hava 6) Gabhricha paus 7) Harichandrasi factory8) Natrang 9) Dhossar, 10) Aarambh  என பத்து மராத்தியத் திரைப்படங்களைப் பார்த்து விட்டேன், பல்வேறு நண்பர்கள் வழியாக கிடைத்த டிவிடி மற்றும் இணையத்தில் தரவிறக்கம் செய்து கிடைத்த இப்படங்களை ஒருசேரப் பார்க்கும் போது மராத்திய சினிமா பற்றி மனதில் இருந்த  பிம்பம் முற்றிலும்  உருமாறிப்போனது, …

ஹரிச்சந்திரா பேக்டரி Read More »