admin

ஷேக்ஸ்பியரின் பறவைகள்

ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் 74 விதமான பறவைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள். Blackbird, Bunting, Buzzard, Chough, Cock, Cormorant, Crow, Cuckoo, Dive-dapper, Dove and Pigeon, Duck, Eagle, Estridge, Eyas-musket, Guinea-hen, Handsaw Falcon and Sparrowhawk, Finch, Goose, Hedge Sparrow, House Martin, Jackdaw, Jay, Kite, Lapwing, Lark, Loon, Magpie, Nightingale, Osprey, Ostrich, Owl, Parrot, Partridge, Peacock, Pelican, Pheasant, Quail, Raven, Robin, …

ஷேக்ஸ்பியரின் பறவைகள் Read More »

என்னம்மா தோழி

காலைப்பனி என்ற படத்தில் சதீஷ ராமலிங்கம் இசையமைத்த என்னம்மா தோழி என்ற பாடலை சில வாரங்களாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன், கேட்கக் கேட்கப் பரவசமாகவே இருக்கிறது, சமீபமாக நான் கேட்ட மிகச்சிறந்த பாடல் இதுவே, ராஜேஷ் செல்வா இயக்கிய இந்தப் பட்ம் சென்ற ஆண்டு வெளியானது என்கிறார்கள், நான் அதைப் பார்க்கவில்லை, ஆனால் பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. தற்செயலாக ஒரு நண்பரின் காரில் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து அதைத்தேடிப்பெற்று கேட்க ஆரம்பித்தேன், இந்தப்பாடலை எழுதியிருப்பவர் சசிக்குமார் …

என்னம்மா தோழி Read More »

ஜோர்பா எனும் உல்லாசி

Since we cannot change reality, let us change the eyes that see reality. -Nikos Kazantzakis ஜோர்பா தி கிரேக் (Zorba the Greek) நாவல் பற்றி முதன்முறையாகக் கவிஞர் தேவதச்சன் என்னிடம் சொன்ன போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன், அதுவரை  நிகோஸ் கசான்ஸ்சாகிஸின் (Nikos Kazantzakis.) எந்தப் படைப்பையும் நான் படித்ததில்லை, மிக முக்கியமான புத்தகம் அது என்று சொல்லி, அவசியம் படிக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தார், கோவில்பட்டியில் அன்றிருந்த …

ஜோர்பா எனும் உல்லாசி Read More »

சிறுமீன்.

 குறுங்கதை அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு  அலகில்  மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு. உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. …

சிறுமீன். Read More »

எனதருமை டால்ஸ்டாய்

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும் அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி …

எனதருமை டால்ஸ்டாய் Read More »

சில குறும்படங்கள்

  சமீபமாக இணையத்தில் நான் பார்த்த சில குறும்படங்கள் மற்றும் ஆணவப்படங்களின் இணைப்பு. காந்தியைப் பற்றிய ஆவணப்படம் காந்தியின் வாழ்க்கைவரலாறு குறித்த ஒரிஜினல் படக்காட்சிகளுடன் கூடிய அரிய காணொளி MAHATMA – Life of Gandhi https://www.youtube.com/watch?v=QCI3nswuYyc சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி இந்தியாவின் மிக முக்கிய உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி, இவரது கதைகளின் பாதிப்பில் இருந்து தான் கமலஹாசனின் ஹேராம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியப்பிரிவினை குறித்து எழுதிய அற்புதமான …

சில குறும்படங்கள் Read More »

செகாவ் வீடியோ

செகாவ்வைப் பற்றிய எனது உரையின் காணொளி (video) தமிழ் ஸ்டுடியோவில் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்கு: https://koodu.thamizhstudio.com/oliyum_oliyum_chegav_s.ra.php குறிப்பு: வீடியோ 1 மணி நேரம், 20 நிமிடங்களுக்கு மேலாக ஓடக்கூடியது. எனவே வீடியோவை தொடர்ச்சியாகப் பார்க்க குறைந்த பட்சம் (532 KBPS) 20 நிமிடம் காத்திருந்து பின்னர் ப்ளே செய்யவும். **

டார்வினின் மகள்

Creation என்று சார்லஸ் டார்வினைப் பற்றி ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அது மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் பார்த்த இரண்டு நாட்களுக்கு டார்வினைப் பற்றி தேடி நிறைய வாசித்தேன்.  அவரது இயற்கையின் வரலாறு  குறித்த தேடுதலும் அது சார்ந்த கண்டுபிடிப்புகளும் கருதுகோள்களும் விஞ்ஞானத்தின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கையின் முதல்சாதனை என்றே தோன்றுகிறது.   பரிணாம வளர்ச்சி குறித்த விஞ்ஞானத்தை டார்வினுக்கு முன்பு. டார்வினுக்கு பின்பு என்று பிரிக்குமளவு அவர் ஒரு முக்கிய புள்ளியாக இருந்திருக்கிறார். இன்று டார்வின் …

டார்வினின் மகள் Read More »

சீட்டாட்டம்

   – சிறுகதை இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும், அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக …

சீட்டாட்டம் Read More »

அவமானச் சின்னம்

When intimacy is forbidden and passion is sin, love is the most defiant crime of all.–  Nathaniel Hawthorne  புனிதர்களும் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதையே சரித்திரம் திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கும் துறவிகளுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. இறைநெறியைப் பரப்புவதற்காக தங்கள் வாழ்வை ஒப்புதல் அளித்தவர்களாக  காட்டிக் கொள்ளும் மதகுருமார்கள், பலநேரங்களில் தங்களின் ரகசிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள எல்லா வகையான கீழான குற்றங்களையும் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதே …

அவமானச் சின்னம் Read More »