admin

எதிர்ப்புக்குரல்

தமிழக மீனவர் பிரச்சனை சார்ந்து இணையத்திலும் டுவிட்டரிலும் நடைபெற்று வரும் ஆவேசமான கண்டனங்கள். எதிர்ப்புக்குரல்கள் மிகுந்த உத்வேகம் தருவதாக உள்ளது மாற்று ஊடகங்களைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதை விட இது போல நடைமுறைச் சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவது முக்கியமானது, இணையத்தில் ஒலிக்கும் இந்த ஒருமித்த குரல் நமது விழிப்புணர்வின் அடையாளம், மனசாட்சியின் வெளிப்பாடு. நான் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட எந்த பொதுவெளியிலும் உறுப்பினராக இல்லை, அதில் எனக்கு விருப்பமும் இருந்ததில்லை, ஆனால் கடந்த சில நாட்களாக டுவிட்டரில் அனுப்பபடும் …

எதிர்ப்புக்குரல் Read More »

முதல் நடிகன்

இந்தியாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட SONG OF INDIA, SAVAGE DRUMS, JUNGLE BOOK, THE BLACK PANTHER, MAN EATER OF KUMAON, ELEPHANT BOY, BLACK NARCISSUS. NORTH WEST FRONTIER  போன்ற பழைய ஹாலிவுட் . பிரிட்டீஷ் படங்களாகத் தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படங்களை பார்த்த அமெரிக்க மக்கள் இந்தியாவை ஏதோவொரு மாயமந்திரத்தீவைப்போல தான் நினைத்திருப்பார்கள், இன்று வரை இந்தியாவைப் பற்றி யதார்த்தமான படம் எதையும் ஹாலிவுட் உருவாக்கவேயில்லை, இந்திய மக்களை ஆதிவாசிகள் …

முதல் நடிகன் Read More »

செகாவைக் கொண்டாடுவோம்

(21-01-2011 அன்று சென்னை LLA சிற்றரங்கத்தில்  கூடு இலக்கிய அமைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் உரைவடிவம்) ** ஆன்டன் செகாவைப் பற்றிப் பேசுவதற்கு நான் இந்த ஆண்டு பிறந்தது முதலே காத்துக் கொண்டிருந்தேன், இது. செகாவ் பற்றி நான் பேசுகிற நான்காவது கூட்டம், செகாவ் மீது பனி பெய்கிறது என்ற எனது புத்தகத்தை ருஷ்ய மேயர் சென்னைக்கு வந்து வெளியிட்டிருக்கிறார், 150 ஆண்டுகளுக்கு முன்பு. ஜனவரி 29-ம் தேதி பிறந்து 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவரான ஆன்டன் செகாவைப் …

செகாவைக் கொண்டாடுவோம் Read More »

எனது பாடல்

வழியெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் கேட்டபடியே சென்னையில் இருந்து கன்யாகுமரி வரை காரில் சென்றேன், ஒரு சேரப்பாடல்களைக் கேட்பதில் உள்ள ஆனந்தத்திற்காகவே பயணம் போகலாம் என்றிருக்கிறது முப்பது வருசங்களாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்ற பாடல்கள் என்றாலும் அதன் புத்துணர்வும், இசை தரும் உற்சாகமான மன எழுச்சியும் அப்படியே இருக்கிறது, அதைத் தீராத மயக்கம் என்பதா. இல்லை நிகரற்ற அகத்தூண்டல் என்பதா, வேண்டும் வேண்டும் என்று மனம் எவ்வளவு பாடலைச் சுவைத்தாலும் திருப்தியுற மறுக்கிறது, இளையராஜா நம் காலத்தின் இசைப்பேராசான், தன்னிகரற்ற …

எனது பாடல் Read More »

ஒநாய்கள் காத்திருக்கின்றன

உலக இலக்கியத்தின் போக்கினை ஒவ்வொரு பத்தாண்டுகாலமும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகை திசைமாற்றம் செய்கிறது. ஆப்ரிக்க இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், அமெரிக்காவின் நான்லீனியர் எழுத்து, பின்நவீனத்துவக் கதையாடல் என்று மாறிவந்த சூழலில் இரண்டாயிரத்துக்கு பிறகான இலக்கியப் போக்கினை மாற்றம் கொள்ளச் செய்திருப்பது ஆசியாவின் சமகால இலக்கியங்களே. குறிப்பாக சீனா, ஜப்பான், லெபனான், கொரியா, இந்தியா, துருக்கி, இஸ்ரேல், கம்போடியா,  ஆர்மீனியா என்று ஒவ்வொரு தேசமும் தனக்கான தனித்துவமான இலக்கியப் பங்களிப்பையும் முன்னில்லாத புதிய கதைசொல்லும் முறைகள், …

ஒநாய்கள் காத்திருக்கின்றன Read More »

விடுமுறைக் குறிப்புகள்

புத்தக வெளியீடுகள், கண்காட்சி என்று டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பரபரப்பாக ஒடியாடியதில் இருந்து விடுபட்டு சில நாட்களாக கன்யாகுமரி மற்றும் திற்பரப்பு அருவி என்று ஒய்வில் இருந்தேன், எவ்வளவோ முறை கன்யாகுமரிக்கு வந்திருந்த போதும் அது புதியதாகவே இருக்கிறது, அறையின் ஜன்னலைத் திறந்தால் கடல். பின்னிரவில் கடற்கரையில் சுற்றி அலைந்தேன், கடல்காற்றைப் போல உன்னதமானது உலகில் வேறில்லை, கடல் மீது நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன,  பனியோடு கூடிய இரவு கடலின் நீல மயக்கம் மனதைப் பெரிதும் சாந்தம் …

விடுமுறைக் குறிப்புகள் Read More »

செகாவ் சிறப்புரை

                                                          ஜனவரி 21  வெள்ளிக்கிழமை அன்று (21.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் ருஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவின் 150 ஆண்டு விழாவை ஒட்டிச் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் இந்த விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு  விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன் ••

மேடைப்பேச்சு

எழுத்தாளனின் வேலை எழுதுவது மட்டுமில்லை, நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்வதும். சமூக அக்கறை சார்ந்து தன்னளவில் செயல்படுவதும், பிற படைப்புகளை வாசித்து எதிர்வினை தருவதும். பள்ளி, கல்லூரி, ஊடகம்  என பலதரப்பிலும் எழுத்து, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும், போர்ஹே பல்கலைகழக மாணவர்களுக்காக ஆங்கில இலக்கியம், செவ்வியல் நாவல் என்று நூறு சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். இப்படி நான் அறிந்தவரை உலக இலக்கியவாதிகளான நபகோவ். வில்லியம் பாக்னர். மார்க்வெஸ். உம்பர்த்தோ ஈகோ. வோலே சோயிங்கா. ரேமண்ட் …

மேடைப்பேச்சு Read More »

100 சிறந்த புத்தகங்கள்

விஜய் டிவி நிகழ்ச்சியில் நான்  குறிப்பிட்ட சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல் பற்றி பலரும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள், அவர்களின் விருப்பத்திற்காக மீண்டும் இதைப் பதிவிடுகிறேன் இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை சார்ந்தது, அதிலும்  முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன், இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும்  ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும் இவை முழுமையாக எங்கே கிடைக்கும் என …

100 சிறந்த புத்தகங்கள் Read More »

நீயாநானா

நேற்று இரவு விஜய் டிவியில் வெளியான நீயா  நானா  நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு பேசிய பகுதியின் காணொளி இணைப்பு  இணைக்கப்பட்டுள்ளது இந்த இணைப்பை வலையேற்றி உதவிய அன்பு நண்பர் பா.ரமேஷ்க்கு நன்றி இணைப்பு : https://www.youtube.com/watch?v=Oj14D4DGTuk&feature=player_embedded