கனவின் மிச்சம்
சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் தி போப்ஸ் டாய்லெட்.(ThePope’s Toilet) உருகுவே நாட்டில் தயாரிக்கபட்ட படமிது. இயக்கியவர் Cesar Charlone and Enrique Fernandez. 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு செய்யபட்டது. லத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் கதை நடைபெறுகிறது. மெலோ என்ற சிறிய ஊர். உருகுவே பிரேசில் எல்லையில் உள்ளது. இந்த ஊருக்கு 1988ம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் விஜயம் செய்யப் போவதாக …