admin

சலித்து போன கடவுள்

சமீபத்தில் ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய இந்த சிறுகதையை வாசித்தேன்.  இவர்  ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரை தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு உதாரணம் போலிருக்கிறது இந்த கதை. அதை எளிமையாக தமிழ்படுத்தியிருக்கிறேன். ***உலகை சிருஷ்டித்து சலித்து போன கடவுள்  எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதை பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் …

சலித்து போன கடவுள் Read More »

பசித்த மழை.

இருபத்தி எட்டாவது வயதில் சென்னையில் தங்குமிடமின்றி அலைந்து கொண்டிருந்த போது ஒரு நண்பனோடு மேன்ஷன் அறையொன்றில் தங்கி இருந்தேன். மிகச்சிறிய அறை. பகலில் கூட வெளிச்சம் வராது. அறையின் ஜன்னல் சாலையை நோக்கியது. அதிலிருந்து புழுதி பெருகி அறைக்குள் நிரம்பிவிடுகிறது என்று சாத்தியே வைத்திருப்பான். நானோ அந்த ஜன்னலை திறந்துவிட்டு வெளியே பார்த்தபடியே இருப்பேன். இரவிற்குள் என்சுவாச கோளங்களில் தெருப்புழுதியேறி நானே  நிறம் மாறியிருப்பேன். ஆனாலும் ஜன்னலை சாத்த மனது வராது. கடந்து செல்லும் காட்சிகளை பார்த்தபடியே …

பசித்த மழை. Read More »

குளிர்காலப் புத்தகங்கள்

குளிர்காலம் புத்தகம்படிப்பதற்கு மிகவும் உகந்த காலம். வேறு எப்போதையும் விட கையிலிருந்த புத்தகம் குளிர்ந்த இரவுகளில் நம்மோடு மிக நெருக்கமாகவிடுகிறது.வார்த்தைகள் தரும் வெம்மை அலாதியானது. சொற்கள் மிக நெருக்கமாக தோளில் கைபோட்டுக் கொண்டு பேசும் நட்புடன் நம்மோடு பேசுகின்றன. மூடிய ஜன்னலின் வெளியே குளிர்காற்று அலைந்து கொண்டிருக்கிறது. புத்தகங்கள் குளிர்காலத்தில் துளிர்க்க துவங்குகின்றன. அதன் பசுமையும் அலைவும் மிக வசீகரமாகயிருக்கிறது. படுக்கையில் கிடந்தபடியே வாசிப்பதற்கு போதுமான வெளிச்சத்தில் படிப்பது அலாதியான அனுபவம். எப்போதும் சில புத்தகங்கள் வாசிக்கபடுவதற்கான …

குளிர்காலப் புத்தகங்கள் Read More »

குறத்தி முடுக்கின் கனவுகள்

தமிழில் எனக்கு பிடித்தமான காதல்கதை குறத்திமுடுக்கு. உடல் இச்சையிலிருந்து துவங்கி  காதலை நோக்கி நகர்வது தான் இதன் தனிச்சிறப்பு. தமிழ் புனைகதையுலகில் அதிகம் காதல்கதைகள் எழுதப்படுவதில்லை. அரிதாக எழுதப்படும் நேரங்களில் கூட அது உடல்இச்சையை கவனமாக தவிர்த்துவிடுகின்றன. காதலின் பிரிக்க முடியாத ஈர்ப்பு காமம் என்பதை கதைகள் அதிகம் விவரிப்பதேயில்லை. வேறு எந்த உணர்ச்சியையும் விட காமமே மனிதனின் ஆதார பிரச்சனை. அதை வெளிப்படுத்துவதிலும் நுகர்வதிலும் சமூகம் உருவாக்கிய தடைகளும் கட்டுபாடுகளுமே தனிமனதின் தீராதபிரச்சனையாக இருக்கின்றன. துக்கம், …

குறத்தி முடுக்கின் கனவுகள் Read More »

மனசாட்சியின் கண்கள்

ஆர்மீனியர்களுக்கும் சென்னைக்குமான தொடர்பு மிக பழமையானது. சென்னை பிராட்வே பகுதியில் ஆர்மீனியன் வீதி இருக்கிறது. இங்கே மிக பழமையான ஒரு புனிதமேரி தேவாலயம் இருக்கிறது. 1772ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமது. இதன் உள்ளே  சென்னையில் வாழ்ந்து இறந்து போன ஆர்மீனியர்களின் கல்லறைதோட்டம் உள்ளது.  அந்த சமாதிகற்களில் ஆர்மீன மொழியில் அவர்களை பற்றிய விபரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன 1794ம் ஆண்டு ஆர்மீனிய மொழியில் வெளியான முதல் செய்திதாள் அஸ்தரார் சென்னையில் இருந்தே அச்சிடப்பட்டது. அதை அச்சிட்ட ஆராதுôன் ஷ்மாவோன் சென்னையில் …

மனசாட்சியின் கண்கள் Read More »

போர் செய்யும் புத்தன்.

எல்லாக் கலைகளைப் போலவே சண்டையிடுதலும் ஒரு கலையே என்கிறார் பௌத்த துறவி போதி தர்மா. எனது பள்ளி வயதில் என்டர் தி டிராகன் திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில படங்கள் திரையிடுவற்கு என்றே மதுரையில் சில திரையரங்குகள் இருந்தன. பெரும்பான்மை பார்வையாளர்கள் அடித்தட்டு மக்கள். ஆங்கிலம் அறியாதவர்கள். தினசரி உழைப்பாளிகள் ஆனால் அவர்களுக்கு சாப்ளினும்,கிரிகிரிபெக்கும், கிளார்க் கேபிளும், பட் ஸ்பென்சரும் மர்லின் மன்றோவும், ஆட்ரி ஹெபர்னும், உர்சுலா ஆண்ட்ருஸ்சும் நன்றாக பரிச்சயமாகியிருந்தார்கள். கைதட்டி ரசித்தார்கள் சில திரைப்படங்களுக்கு அரங்க …

போர் செய்யும் புத்தன். Read More »

வாசக பர்வம்.

உயிர்மையில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பரந்த கவனத்திற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான  எழுத்தாளர்கள் குறித்து நான் எழுதிய பத்தியான வாசகபர்வம் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவருகிறது. இந்த நூலில் வைக்கம் முகமது பஷீர், சுஜாதா,பிரமீள், விக்கிரமாதித்யன், சி.சு. செல்லப்பா பிரபஞ்சன், பா. சிங்காரம் கோபி கிருஷ்ணன், ந.முத்துசாமி, அசோகமித்ரன், கி.ராஜநாராயணன். ஏ.கே. ராமானுஜன், வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, கவிஞர் மீரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்று தமிழ் இலக்கியத்தின் தனித்த ஆளுமைகளை நான் தேடிச் சென்று சந்தித்த நினைவுகளையும், …

வாசக பர்வம். Read More »

பேசத்தெரிந்த நிழல்கள்

இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்று சொல்லலாம். கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் ஆழ்ந்த விமர்ன கூறுகளை முன்வைத்து இவை எழுதப்படவில்லை. என்னை பாதித்த சில படங்கள், அதற்கான காரணங்கள், அதிலிருந்து மீளும் நினைவுகள். நான் சந்தித்த சில திரை நட்சத்திரங்கள் அவர்கள் குறித்த ஞாபகங்கள் இவையே இந்த கட்டுரைகளின் அடிநாதம். ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் உதயம் இதழிலும் உயிர்மையிலும் இதில் …

பேசத்தெரிந்த நிழல்கள் Read More »

நகுலன் வீட்டில் யாருமில்லை

Fables and Parables எனப்படும் குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. இந்த கதை வகைமையின் சிறப்பு அடையாளங்களாக ஜென் கதைகள், முல்லா கதைகள், சூபி கதைகள், பைபிள் கதைகள், ஜாதகக் கதைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை மனித மனதின் ஆதார இச்சைகளை, ஏக்கங்களை, துயரங்களை பேசுகின்றன. உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களான போர்ஹே, இதாலோ கால்வினோ, யாசுனாரி கவபட்டா, ஹென்ரிச் ப்யூல், காப்கா,  மார்க்வெஸ்,  டொனால்டு பார்த்தல்மே,  போன்றவர்கள் இந்த குறுங்கதை மரபை புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள். நீதி போதிக்கவும் போதனைக்கும் …

நகுலன் வீட்டில் யாருமில்லை Read More »

மலைகள் சப்தமிடுவதில்லை.

இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் நான் எழுதிய கட்டுரைகள் ஆளுமைகள், அக்கறைகள், அனுபவங்கள் என்று வகைப்படுத்தி தொகுக்கப்பட்டு தனித்த நூலாகியுள்ளது. எதை எழுதும் போது அதில் நினைவுகள் கலந்துவிடுகின்றன. நினைவுகளின் நிழல் விழாத எழுத்து இருக்கிறதா என்ன? இந்த நினைவுகள் தனிநபர் சார்ந்தவை இல்லை. மாறாக நான் வாழும்காலத்தில் கண்டதும் காரணமற்று கைவிடப்பட்டதும், அறிந்து புறக்கணிக்கபட்டதுமான வாழ்வியலின் நுண்மையான சாட்சிகள். கிராமம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே அறிமுகமாகி போன மாநகர சூழலில் சிறுவர்கள்  ஒட்டுபுல்லை கூட கண்ணில் …

மலைகள் சப்தமிடுவதில்லை. Read More »