admin

செகாவ்வும் கார்க்கியும்

நூறு வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ்வை சந்திப்பதற்கு சக எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி  சென்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றிய நினைவுகுறிப்புகள் ஒன்றை இரண்டு நாட்களின் முன்பாக வாசித்தேன். செகாவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கடன்தொல்லை காரணமாக வீட்டை விட்டு ஒடிப்போனார். தானே வேலை செய்து சம்பாதித்து படித்தவர். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு  இலவச வைத்தியம் செய்தபடியே எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் …

செகாவ்வும் கார்க்கியும் Read More »

தண்ணீரோடு பேசுங்கள்.

உலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள்  பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin  ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்த அறுபது வயதைக் கடந்த பெண். இன்றும் தனது நெடும்பயணத்திலிருக்கிறாள். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஏரி தி கிரேட்டர் லேக். இது ஐந்து பெரிய ஏரிகளாகவும் சிறு சிறு ஏரிகள், தீவுகளாகவும் பெரிய கடல் …

தண்ணீரோடு பேசுங்கள். Read More »

சிவகங்கை சீமை

தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959ல் வெளியானது. கே. சங்கர் இயக்கியுள்ளார். படத்தில் பதினாறு பாடல்கள். வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும் அது ஒரு முன்மாதிரி படம். சரித்திரபடம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, நீதி கேட்கும் தர்பார், அலங்காரமான தங்க வைர நகைகள், அந்தபுரம், ஆடல் பெண்கள், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , …

சிவகங்கை சீமை Read More »

டால்ஸ்டாயின் மௌனபடம்

ருஷ்ய இலக்கியமேதை டால்ஸ்டாயின் கதைகளை வாசிக்கும் போது அவரது குரல் நமக்கு நெருக்கமாக கேட்பது போலவே இருக்கும். பலநேரங்களில் அவர் ஒரு ருஷ்ய எழுத்தாளர் என்பது  கூட மறந்துவிடும். குறிப்பாக அன்னாகரீனனா படிக்கும் போது அன்னாவின் பெருமூச்சையும் விம்மலையும் காகிதத்தில் உணர்ந்திருக்கிறேன். கசாக்கை வாசிக்கையில் ராணுவவீரனின் தனிமை என் காதில் கிசுகிசுத்த குரலில் கேட்டிருக்கிறது. டால்ஸ்டாயின்குரல் எப்படியிருக்கும் என்று நானே யோசித்து கொண்டிருந்ததுண்டு. ஒரு முறை எனது நண்பர் புகழ்பெற்ற மனிதர்களின் குரல்களின் பதிவு கொண்ட குறுந்தகடு …

டால்ஸ்டாயின் மௌனபடம் Read More »

எனது புத்தகங்கள்

  அன்புள்ள வாசக நண்பர்களுக்கு, உயிர்மை பதிப்பகம் இந்த ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்ட எனது 8 நூல்களும் இப்போது உயிர்மை இணைய தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.  உயிர்மை பதிப்பகம் ஆன்லைன் மூலம் இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யும் வாசகர்களுக்கு சலுகை விலையினை ஏப்ரல் 30 வரை அறிவித்திருக்கிறது.  8 நூல்களின் மொத்த விலை ரூ.1735. இந்தியாவில் இது மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ.1500/-க்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தபால் செலவு இலவசம்.  இந்தியாவிற்கு வெளியே இந்த …

எனது புத்தகங்கள் Read More »

பறத்தலின் ஆனந்தம்

நேற்று Winged Migration   என்ற ஆவணப்படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா என்ற கலை எத்தனை வலிமையானது. அதன் உதவியால் இயற்கையை எவ்வளவு நுட்பமாகவும் நெருக்கமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்ற சிலிர்ப்பு உண்டானது. சில நாட்களுக்கு முன்பாக Winged Migration ஆவணப்படத்தை பார்த்தேன். 86 நிமிசங்கள் ஒடும் இந்தப் படம் பருவகாலத்தில் இடம் விட்டு இடம் பறக்கும் பறவைகளின் முடிவற்ற பயண வழிகளைப் பற்றியது. உலகின் நிரந்தர யாத்ரீகன் பறவைகளே. படம் துவங்கிய …

பறத்தலின் ஆனந்தம் Read More »

ரயிலோடும் தூரம்

ரயில் பயணத்தில் பின்னிரவில் விழித்துக் கொண்டு இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ? எனது பெரும்பான்மை ரயில்பயணங்களில் பின்னிரவில் விழித்தபடியே தொலைதூர காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். கல்கத்தாவை நோக்கிய ரயிலில் இருந்து பார்த்த நிலவு. வாரணாசி எக்ஸ்பிரஸில் இருந்து கண்ட கங்கை காட்சிகள், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸில் தென்பட்ட ஈரமான கிராமங்கள், மலைரயிலில் கண்ட குகைகள், சபர்மதி எக்ஸ்பிரஸில் பார்த்த விடிகாலையின் மழை. இப்படி எத்தனையோ காட்சிகள். ஈரத்துணி போல மனது …

ரயிலோடும் தூரம் Read More »

உதவும் இணையதளங்கள்.

அன்றாடம் இணையத்தில் ஏதாவது தேடிக்கொண்டிருக்கும் போது கண்ணில் படும் சில முக்கிய இணையதளங்களை குறித்து வைத்துக் கொள்வது எனது பழக்கம். சில வேளைகளில் நண்பர்கள் முக்கியமானதாக கருதும் இணையதளங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அப்படி சமீபத்தில் என் கண்ணில் பட்ட முக்கிய இணையதளங்கள் இவை. குறிப்பாக திரைப்படத்துறை சார்ந்து பணியாற்றுபவர்களுக்கும், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்குபவர்களுக்கும், சினிமாவை கற்றுக் கொள்ளவும் சுயமாக குறும்படங்களை உருவாக்கவும் விரும்புகின்றவர்களுக்கும் இந்த இணைப்புகள் பயன்தரக்கூடும். இலவசமாக கிடைக்க கூடிய சில மென்பொருட்கள் …

உதவும் இணையதளங்கள். Read More »

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ்.

இரும்புக்கை மாயாவி, வேதாளம்,டின்டின், என்று காமிக்ஸ் புத்தகங்களை தேடித் தேடி படித்தவன் நான். இன்றைக்கும் அந்த ஆர்வம் குறையவேயில்லை. சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வந்து இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன்.  சில மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக சாது என்ற புதிய காமிக்ஸ் புத்தகத்தை லேண்ட்மார்க்கில்  வாங்கி வந்தேன். மிகசிறப்பாக இருந்தது.  யார் இதை உருவாக்குகிறார்கள் என்று தேடிப் படித்த போது  பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் தான் இந்த …

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ். Read More »

கசப்பு பழங்கள் .

நேற்று மாலை ஒரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக சீதாப்பழத்தை பார்த்தேன். ஆசையாக ஒரேயொரு சீதாப்பழத்தை வாங்கி பிய்த்து சாப்பிட்டேன், பற்பசையை தின்பது போன்று சக்கையாக இருந்தது. ஏன் இப்படி ருசியேயில்லை என்று கடைக்காரனிடம் கேட்டபோது இது எல்லாம் கலப்பு விதைல வர்றது  சார் . அப்படி தான் இருக்கும். ஜ÷ஸ் போட்டு நிறைய சீனி போட்டு சாப்பிடணும். தனியா சாப்பிடக்கூடாது என்று சொன்னார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சீதா பழத்தை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் …

கசப்பு பழங்கள் . Read More »