சிறிது வெளிச்சம்
ஆனந்த விகடனில் சிறிது வெளிச்சம் என்ற புதிய தொடரை துவங்கியுள்ளேன். துணையெழுத்து கதாவிலாசம், தேசாந்திரி போல இந்த தொடரும் என்னை சுற்றிய நிகழ்வுகள் மனிதர்கள், அவர்களின் அறியப்படாத சிறப்பம்சங்கள் பற்றியதாக இருக்கும். சிறிது வெளிச்சம் என்பது குபராவின் சிறுகதை தலைப்பு. அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. அதற்காக குபராவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். விடிகாலையில் வீட்டின் அடுப்படியில் சிறிய வெளிச்சம் ஒன்றிற்குள் பிறர் தூக்கம் கெட்டுவிடாமல் வேலை செய்யும் அம்மாவை கண்டிருக்கிறேன். பெண்களுக்கு சிறிய வெளிச்சம் …