ஆங்கிலம் பிடிக்காத பூனை
ஆங்கிலம் ஒரு மொழிமட்டுமல்ல. அது காலனியாதிக்கத்தின் அடையாளம் மற்றும் காலனியாக்குவதற்கான கருவி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த ஆங்கில மோகத்திற்கு எதிராக மிகுந்த கேலியும் விமர்சனமுமாக எழுதப்பட்ட ஜப்பானிய நாவல் I Am a Cat. இதை எழுதியவர் நட்சுமி சுசூகி (Natsume Sōseki). 1905 ஆண்டு ஜப்பானில் எழுதப்பட்ட இந்த நாவல் மெய்ஜி காலகட்டத்தில் மக்கள் எப்படி போலியானதொரு ஆங்கில மோகம் கொண்டிருந்தார்கள் என்பதை கேலி செய்கிறது. இதை எழுதிய நட்சுமி சுசூகி ஒரு ஆங்கிலப்பேராசிரியர் என்பது …