நினைவின் கலகம்.
மறதிக்கு எதிராக நினைவின் கலகம் தான் எழுத்து என்கிறார் மிலன் குந்தேரா. இன்றைய புகலிடக் புனைகதைகள் பெரிதும் இந்த முனைப்பிலிருந்தே பிறக்கின்றன. மறக்கடிப்பதை வேலையாக செய்வதே அதிகாரத்தின் பெருந்தந்திரம். அதைப் புனைவின் வழியே எதிர்க்கொள்வதும் நினைவின் தூண்டுதலால் புல்லின் நிழல் அளவு நம்பிக்கையாவது ஏற்படுத்திவிட முடியும் என்று முயற்சிப்பதுமே கலையின் தொடர்ந்த செயல்பாடாக உள்ளது. இன்றைய சிறுகதைகள் அன்றாடப் பிரச்சனைகளின் வடிகால்கள் அல்ல. மாறாக வாழ்வின் மீதான தீவிர விசாரணைகள். கதை ஒரு புனைவெளியாகவே, மாற்று இருப்பாகவே …