டால்ஸ்டாயின் மௌனபடம்
ருஷ்ய இலக்கியமேதை டால்ஸ்டாயின் கதைகளை வாசிக்கும் போது அவரது குரல் நமக்கு நெருக்கமாக கேட்பது போலவே இருக்கும். பலநேரங்களில் அவர் ஒரு ருஷ்ய எழுத்தாளர் என்பது கூட மறந்துவிடும். குறிப்பாக அன்னாகரீனனா படிக்கும் போது அன்னாவின் பெருமூச்சையும் விம்மலையும் காகிதத்தில் உணர்ந்திருக்கிறேன். கசாக்கை வாசிக்கையில் ராணுவவீரனின் தனிமை என் காதில் கிசுகிசுத்த குரலில் கேட்டிருக்கிறது. டால்ஸ்டாயின்குரல் எப்படியிருக்கும் என்று நானே யோசித்து கொண்டிருந்ததுண்டு. ஒரு முறை எனது நண்பர் புகழ்பெற்ற மனிதர்களின் குரல்களின் பதிவு கொண்ட குறுந்தகடு …