தண்ணீரோடு பேசுங்கள்.
உலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள் பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்த அறுபது வயதைக் கடந்த பெண். இன்றும் தனது நெடும்பயணத்திலிருக்கிறாள். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஏரி தி கிரேட்டர் லேக். இது ஐந்து பெரிய ஏரிகளாகவும் சிறு சிறு ஏரிகள், தீவுகளாகவும் பெரிய கடல் …