ஈரக்காகிதம்
உதயம் தியேட்டரில் இருந்து கேகேநகர் செல்லும் சாலையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையின் அருகில் உள்ள நடைபாதையில் புத்தகங்களை குவித்து போட்டிருக்கும் ஒரு பழைய புத்தக கடைக்காரருடன் எனக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். சில நாட்கள் எனக்கு போன் செய்து பழைய புத்தகங்கள் வந்துள்ளது பாருங்கள் என்று அழைப்பார். ஐம்பது வயதைத் தாண்டிய உருவம். பெயர் பாய். எப்போதுமே வெள்ளை ஜிப்பா அணிந்திருப்பார். பல ஆண்டுகாலமாக குப்பை தூசி நிரம்பிய காகிதங்களுடன் வாழ்ந்து நுரையீரல் பாதிப்பு கொண்டவர், சக்கரை நோயும் …