admin

ஒத்திகை.

நேற்று கேரளாவிலிருந்து ஜோஸ் என்ற நவீன நாடக இயக்குனர் என்னைப் பார்க்க வந்திருந்தார். எனது அரவான் நாடகத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து கொள்வது தொடர்பான சந்திப்பு அது. பேச்சு தமிழ் நவீன நாடகச் சூழலைப் பற்றி திரும்பியது. வருடத்திற்கு பத்து நவீன நாடகங்கள் கூட சென்னையில் நடத்தப்படுவதில்லையே அது ஏன் என்று கேட்டார். நவீன நாடகங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் ஆர்வம் மற்றும் தொடர்ந்த ஈடுபாட்டின் காரணமாக மட்டுமே தமிழில் நடைபெற்று வருகின்றன. நாடகங்களை நிகழ்த்துவதில் உள்ள முக்கியப் …

ஒத்திகை. Read More »

விசித்ரி

     –  புதிய சிறுகதை விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை.  அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் …

விசித்ரி Read More »

துயர்மிகு பொழுது

சமீபத்திய ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல்களும் போரின் அவலமும் என்னை பெரிதும் துயரமடையச் செய்து வருகின்றன. சில இரவுகளில் கணிப்பொறி முன்பாக எழுத அமரும் போதெல்லாம் எழுதுவதால் என்ன செய்துவிட முடியும் என்ற குற்றவுணர்ச்சி பெருகி வதைக்க கணிப்பொறியை அணைத்துவிட்டு மௌனமாக வெறும்திரையை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது நடந்திருக்கிறது. திரையை அணைத்து விடலாம் ஆனால் நினைவுகளை. பதுங்கு குழிக்குள் நடுங்கியபடி நிற்கும் சிறார்களின் கண்களில் பீறிடும் பயம் அடிமனதில் தீக்கோலால் சூடு இடுவது போன்ற பச்சைவலியை உருவாகிறது. இருப்பிடம் அழிக்கபட்டு, …

துயர்மிகு பொழுது Read More »

ஜீ.வி. ஐயர்

. ஐந்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு காலையில் கன்னட இயக்குனர் ஜீ.வி. ஐயர் தனது புதிய படமாக ராமாயணத்தை இயக்க உள்ளார். அது பற்றி சில நண்பர்களுடன் கலந்து பேச இருக்கிறார். நீங்கள் வர முடியுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஜீ.வி. ஐயர் இயக்கிய மத்துவாச்சாரியார், ஆதிசங்கரா, விவேகானந்தர், பகவத்கீதை போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் படம் எடுக்க கூடிய ஒரே இந்திய இயக்குனர். நிறைய தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். கன்னட சினிமாவின் பீஷ்மர் என்று கொண்டாடப்படுபவர். …

ஜீ.வி. ஐயர் Read More »

அ. எக்பர்ட் சச்சிதானந்தம்.

நவீன தமிழ் இலக்கியம் என்பது ஆளுமைகளின் உலகம் மட்டுமில்லை. புதுமைபித்தனுக்கும் ஜானகிராமனுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்றால் ஜானகிராமனே சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்த வல்லம் தாஜ்க்கும் ஒரு இடம் இருக்கவே செய்கிறது. அறியப்பட்ட இலக்கிய ஆளுமைகளை விடவும் அறியப்படாத முக்கியபடைப்பாளிகள் என்று ஐம்பது பேரைச் சுட்டிகாட்ட முடியும். அவர்கள் அதிகம் எழுதியிருக்கவில்லை. ஒரு சிறுகதைத் தொகுப்போ. கவிதைத் தொகுப்போ வெளியிட்டிருக்கிறார்கள். மின்னல் ஒளிர்வு தனியொளியாக மின்னுவதைப் போல தொடர்ந்து தீவிர இலக்கியத் தளங்களில் பங்குபெறாத போதும் …

அ. எக்பர்ட் சச்சிதானந்தம். Read More »

இதாலோ செவோ

 பாதசாரியின் காசி குறுநாவலை வாசித்த போது அதில் இதாலோ செவோ (Italo Svevo ) பற்றி முதல்முதலாக அறிந்து கொண்டேன். பாதசாரி சிறந்த நவீன கவிஞர். அவரது காசி குறுநாவல் குறிப்பிடத்தக்கவொன்று. மீனுக்குள் கடல் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். கோவையில் வசிக்கிறார். அந்த குறுநாவல் வெளியாகி இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இன்றும் அது குறித்து தீவிரஇலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள். பாதசாரி இதாலோ செவோவின் Confessions of Zeno  நாவலை வாசித்திருக்கிறார். அந்த நாவலை …

இதாலோ செவோ Read More »

ஷோலே – அசலா ? நகலா ?

திரைப்பட இயக்குனர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர், ஷோலே மாதிரி ஒரிஜினலான படம் இப்போ எங்க சார் வருது. எப்பேர்பட்ட படம் என்று அடிக்கடி வியந்து கொண்டிருந்தார். எனக்கும் ஷோலே படம் பிடிக்கும். ஆனால் அந்த படம் நிறைய படங்களில் பாதிப்பில் உருவானது என்று சொன்னேன். உடனே அவர் அது எப்படி சார். இப்போ தானே பாரீன் பிலிம்ஸ் பார்த்துட்டு அந்த பாதிப்பில் படம் பண்ணுகிறார்கள். ஷோலே 1975 ல் வெளியான படம் அதில் எப்படி …

ஷோலே – அசலா ? நகலா ? Read More »

விர்தியானா

லூயி புனுவலின் விர்தியானாவை (Luis Buñuel – Viridiana ) சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு முறை பார்த்தேன். குறிப்பிட்ட சில இயக்குனர்களின் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. செவ்வியல் நாவல்களைப் போல ஒவ்வொரு முறையும் அதில் சில அதிசயங்கள் கண்ணில் படுகின்றன. அந்த வரிசையில் புனுவல் மிக முக்கியமானவர். புனுவலின் திரைபடத்தின் மையக்கரு எப்போதுமே சர்சைக்கு உரியது. பல நேரங்களில் அவரது படங்கள் எழுப்பிய எதிர்வினை அரசியல் சமூக தளங்களில் வலிமையாக …

விர்தியானா Read More »

செர்ஜியோ லியோனி.

        அகிரா குரசோவாவிற்கு இணையான இன்னொரு திரைப்பட இயக்குனரைச் சொல்ல முடியுமா என்று அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது அவர் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் சொன்ன பதில், செர்ஜியோ லியோனி. (Sergio Leone) ஆனால் குரசோவா அறியப்பட்ட அளவு செர்ஜியோ லியோனியின் பெயர் கொண்டாடப்படவில்லை. அவரது படங்களை அறிந்தவர்கள் கூட அதை இயக்கியவர் செர்ஜியோ லியோனி என்று அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அவை கலைப்படங்கள் அல்ல. மாறாக …

செர்ஜியோ லியோனி. Read More »

சிறந்த இந்தியப்படம் பரிசு

          நான் கதை வசனம் எழுதிய முரளி மனோகர் இயக்கிய கர்ணமோட்சம் திரைப்படம் நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில்  புதுடெல்லியில் நடைபெற்ற   International Students’ Film Festival,.First Frame 2008     என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குறும்பட போட்டிகளில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு பத்திற்கு மேலான விருதுகளை பெற்றுள்ளது கர்ணமோட்சம். …

சிறந்த இந்தியப்படம் பரிசு Read More »