admin

நன்றி

        எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தும் மின்னஞ்சல் வழியாக எனக்கு வாழ்த்துகள் அனுப்பிய இணையதள வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி. விழா சிறப்பாக நடைபெற்றது. புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். சென்னை புத்தக சந்தை 8 ம் தேதி முதல் 18 வரை நடைபெறுகிறது. ஜனவரி 10 , 11, 12  மற்றும்  13, 16, 17 தேதிகளில் மாலையில் ஐந்து …

நன்றி Read More »

2008 விருப்ப பட்டியல்

ஒரு ஆண்டு நம்மை கடந்து செல்கிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயம். இன்றைக்கும் பழக்க தோஷத்தில் 2008 என்று தான் கையெழுத்து இடுகிறேன். மனதிலிருந்து 2008 முழுவதுமாக வெளியேற வில்லை. திட்டு திட்டான நினைவுகளாகவும் சிறு சம்பவங்களாகவும் உடைந்த கண்ணாடி துண்டின் சில்லுகளை போல பழசை நினைவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறது. ஒரு வருடத்தின் நினைவாக நமக்குள் மிஞ்சியிருப்பது அதிகபட்சம் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்.  அதற்கான காரணமும் கவனமும் ஆளுக்கு ஆள் மாறுபட்டது  …

2008 விருப்ப பட்டியல் Read More »

தாமரை பூத்த குளம்.

என் நண்பரின் அறிமுகத்தால் சுசாந்த் மிஸ்ரா என்ற ஒரியாவைச் சேர்ந்த இயக்குனரை 1994 ல் சந்தித்தேன். சுசாந்த் மிஸ்ரா இந்தர் தனுர் சாயா என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர். அவரது இன்னொரு படம் பிஸ்வபிரகாஷ் உலக படவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான பரதநாட்டிய கலைஞரை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரிப்பதற்காக அவருக்கு தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் நிதியுதவி அளித்திருந்தது. அந்த படத்திற்கான பின்ணணி ஆய்வு மற்றும் இடங்களை …

தாமரை பூத்த குளம். Read More »

வலி தரும் முள்.

முள் – முத்துமீனாள். ஆழிபதிப்பகம் .சென்னை. 24. விலை ரூ.50. சமீபத்தில் வெளியாகியுள்ள முள் என்ற முத்துமீனாளின் நாவலை வாசித்தேன். முத்துமீனாள் கவிஞர் பௌத்த அய்யனாரின் மனைவி. சிறுபத்திரிக்கை உலகில் அய்யனார் பெரிதும் அறியப்பட்டவர்.  இதை ஒரு நாவல் என்பதை விடவும் முத்துமீனாளின் நினைவுக்குறிப்புகள் என்றே வகைப்படுத்த வேண்டும். முத்துமீனாள் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட தொழுநோய் பற்றியும் அதற்காக கும்பகோணத்தில் உள்ள கிறிஸ்துவ மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிட்சை செய்த போது ஏற்பட்ட நினைவுகளையும், நோய் நீங்கிய …

வலி தரும் முள். Read More »

தாய்முகம்

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தன்னுடைய சிறுவயதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றினை விவரித்தார். அவரது ஊர்  மதுரை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். பிறந்த சில மாதங்களிலே  தாயை இழந்தவர். அம்மாவின் முகம் கூட அவருக்குத் தெரியாது. அவர்கள் ஊரில் அடிக்கடி பெண்களுக்கு பேய் பிடித்து கொள்ளுமாம். அப்படி ஒரு நாள் அவர்கள் வீதியில் இருந்த பெண் ஒருத்திக்கு பேய் பிடித்து கொண்டுவிட்டது என்று பேயோட்டும் நபரை அழைத்து வந்திருக்கிறார்கள் பேயோட்டி தன் கையில் உள்ள …

தாய்முகம் Read More »

கடைசிப் பெண்

ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில்  அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித்  ஜோன்ஸ்  இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். …

கடைசிப் பெண் Read More »

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் …

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது. Read More »

சினிமாவும் ஜெயகாந்தனும்

பத்து பதினைந்து வருடத்தின் முன்புள்ள பழைய கணையாழி இதழ் ஒன்றில் வெளியான ஜெயகாந்தனின் நேர்காணல் இது. வெளிப்படையான பேச்சும் திறந்த விமர்சனமும் கொண்ட இதை புதிய  வாசகர்களின் கவனத்திற்காக இங்கே பதிவு செய்கிறேன். ** கணையாழி: சினிமா துறைக்கு வந்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஜெயகாந்தன்: ஆமாம். நானாக வலியவரவில்லை. நண்பர்களோடு ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுடன் படத்தின் தரம்பற்றி விவாதம் செய்ததுண்டு. இவ்வளவு பேசறியே, நீதான் ஒரு படம் நீ சொல்ற மாதிரி எடுத்துக்காட்டு என்றார்கள். `சரி` என்று இறங்கிவிட்டேன். …

சினிமாவும் ஜெயகாந்தனும் Read More »

காட்சிக் கூண்டு

 – சிறுகதை மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள்  நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது. ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு …

காட்சிக் கூண்டு Read More »

கூர்க்காவின் பகல்

விழித்துக் கொண்டிருந்த எத்தனையோ பின்னிரவுகளில் அந்த நடைச்சப்தத்தை கேட்டிருக்கிறேன். யாருமற்ற தெருவில் தனியே விசில் அடித்தபடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் நாற்பது வயதை கடந்த  கூர்க்காவை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். என்ன வேலையிது. எதற்காக இந்த மனிதன் தெருத்தெருவாக இரவில் சுற்றியலைகிறான் என்று புரியாமலும் கூட இருக்கும். ஒரு நாள் நேரத்திற்கு உறங்காமல் போனால் அடுத்தநாள் நமக்கு வேலை ஒடுவதில்லை. சதா எரிந்து விழுகிறோம். தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்கின்றவர்கள் கூட வருசம் முழுவதும் …

கூர்க்காவின் பகல் Read More »