admin

இரண்டு திரைக்கதையாசிரியர்கள்.

  ராபர்ட் டௌனி உலகெங்கும் திரைப்படக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இன்று வரை பாடமாக படிக்கும் திரைக்கதைகளில் ஒன்று சைனா டவுன். இதை எழுதியவர் ராபர்ட் டௌனி. ரோமன் பொலன்ஸ்கில்யின் இயக்கிய இந்த  திரைப்படத்திற்காக ராபர்ட் டௌனி ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார் பாடமாக படிக்கும் அளவு அப்படி என்ன இருக்கிறது சைனாடவுனில் ? ஒரு துப்பறியும் நிபுணரிடம் ஒரு பெண் தனது கணவன் மீது சந்தேகப்படுவதாக சொல்லி அவரை கண்காணிக்க  சொல்கிறாள். அவனும் கண்காணிக்கிறான். அதன் முடிவில் வேறு …

இரண்டு திரைக்கதையாசிரியர்கள். Read More »

கண்ணகியின் நிழலில்

ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல இயக்குனரான குருதத் சிலப்பதிகாரத்தை படமாக்க விரும்பினார். அந்தக் கதை அவரது சொந்த வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.  கீதா தத் என்ற பாடகியைத் திருமணம் செய்து கொண்ட குருதத் தன் படங்களில் நாயகியாக நடித்த வகிதா ரஹ்மானை காதலித்து கொண்டிருந்தார். இரண்டு பெண்களும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். கீதா வங்களாத்தை சேர்ந்தவர். ராய் சௌத்ரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் இசையில் பாடி மிகுந்த புகழ் பெற்றவர். …

கண்ணகியின் நிழலில் Read More »

வெயில்படல்

சில நாட்களாகவே பயணம் அலைச்சல், காய்ச்சல், என்று நோய்மையுற்றிருந்தேன். ஆகவே  லேசான குளிரின் குதுகுதுப்பு எனக்குள் எப்போதுமிருந்தது. இரண்டு நாட்களின் முன்பாக காலையில் வீட்டின் வாசலில் கிடக்கும் பிரம்பு நாற்காலி மட்டும் தனியே வெயிலில் கிடப்பதை கண்டேன். . காலைவெயில். மிகுந்த ப்ரகாசமாக இருந்தது. காலை வெயிலை பார்த்துக் கொண்டேயிருந்தேன். உடைந்த முட்டையிலிருந்து வழிந்தோடும் திரவத்தின் பிசுபிசுப்பை போலான வெயில். வீட்டிலிருந்து எழுந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். சில நிமிசங்களில் உடம்பெங்கும் எறும்பு ஏறுவது போன்ற …

வெயில்படல் Read More »

மைக்கேல் கலாசோ

மைக்கேல் கலாசோசமகால உலக சினிமாவின் திரை இசையமைப்பாளர்களில் மைக்கேல் கலாசோ (Michael Galasso )தனித்து அறியப்படும் அற்புதமான கலைஞர்.  இவர் இசையமைத்த இன் தி மூட் பார் லவ் திரைப்படம் சினிமாவில் இசையின் பங்கு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன் உதாரணம். வொங் கர் வாயின் இயக்கத்தில் உருவான இந்த படத்தை காட்சியியல் கவிதை என்று சொல்லலாம். ஒளிப்பதிவும் இசையுமே படத்தின் அடித்தளம். மிக மெல்லிய காதல்கதை ஒன்றின் உணர்ச்சி வெளிப்பாடாக அமைந்த ஒளிப்பதிவாலும், …

மைக்கேல் கலாசோ Read More »

நவீன ஓவியம்

சில கேள்விகள்.  சில விளக்கங்கள் – ஜோசப் ஜேம்ஸ் மறைந்த பேரா. திரு. ஜோஸப் ஜேம்ஸ் இந்திய முன்னணி ஓவிய விமர்சகர்களில் ஒருவர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முக்கியமான ஓவியப் பத்திரிக்கைகளில் இவர் விமர்சனங்களும் கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. நவீன ஓவியம் ஏன் புரியவில்லை. ? உங்களுக்கு மரபு ஓவியம் புரிகிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலருக்கும் மட்டுமே அதன் தத்துவமும், கோட்பாடும் தெரிந்திருக்கின்றன. நீங்கள் சொல்லக்கூடியதெல்லாம், மரபு ஓவியம் உங்களுக்குப் பரிச்சயமானது என்பதுதான். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் …

நவீன ஓவியம் Read More »

பாட்டிகளின் கடவுள்

பனிரெண்டு வயதில் திருவிளையாடல் படம் பார்க்கும்வரை கடவுள் பற்றிய பயம் எனக்குள் ஆழமாக வேர் ஊன்றியிருந்தது. அதற்கு முக்கிய காரணம்  ஒவ்வொரு நாளும் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும் என்ற ஒழுங்கை கொண்டிருந்த வைதீகமான குடும்பம் என் தாத்தாவின் வீடு. கடவுள் எப்போதுமே எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு தெரியாமல் எதையும் செய்துவிட முடியாது. ஆகவே பயபக்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கபடுத்தபட்டிருந்தோம். கோவிலுக்கு போவதும் விரதமிருப்பமிருப்பதும் வீட்டின் மாற்றமுடியாத பழக்கங்கள். நெற்றியில் திருநீறு பூசாமல் …

பாட்டிகளின் கடவுள் Read More »

காதில்லாத அரசன்

புதிய குறுங்கதை. கடலும் மலையும் சூழ்ந்த ஒரு நாட்டை காதில்லாத அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவனது மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரசவம்சத்தில் பிறக்கும் எவருக்கும் காதிருப்பதில்லை. அது அவர்களுக்கு பெரிய குறையாகவும் இல்லை. அரசனுடைய காதுகளை உண்மையான செய்திகள் எந்த காலத்திலும் எட்டியதேயில்லை என்பதால் காதை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்து காதற்று போய்விட்டதாக ஒரு நம்பிக்கையிருந்தது. அதை மெய்பிப்பது போலவே அரசவம்சத்தில் பிறக்கும் குழந்தைகளும் காதில்லாமலே பிறந்தன. காதில்லாத அரசன் அரண்மனையை விட்டு வெளியே வருவதுமில்லை . யாரையும் …

காதில்லாத அரசன் Read More »

பொய் சொல்லும் பூனை

சில நாட்களுக்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு நண்பர் நான் படிப்பதற்காக ஜோகன் ஸ்பாரின் தி ராபிஸ் கேட் ( Joann Sfar -The Rabbi`s Cat )  என்ற கிராபிக்நாவலை வாங்கிவந்திருந்தார். இதை சில மாதங்களாகவே தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக அவர் வரும்போது நினைவூட்டவே மறக்காமல் வாங்கி வந்திருந்தார். காமிக்ஸ் புத்தகங்களின் மீதான விருப்பம் சிறுவயது முதல் என்னோடு சேர்ந்து வளர்ந்து வரக்கூடியது. இப்போதும் புதிதாக ஏதாவது காமிக்ஸ் கண்ணில் பட்டால் வாங்கி வாசிப்பதுண்டு. காமிக்ஸ் …

பொய் சொல்லும் பூனை Read More »

புத்தக கண்காட்சியில் சில மணி நேரம்.

சனிக்கிழமை மதியம் புத்தக கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புத்தகத் திருவிழா துவங்கி  மூன்றாம் நாள் . மாலையில் செல்வது என்று முதலில் முடிவுசெய்திருந்தேன். ஆனால் பின்மதிய நேரத்தில் சற்று கூட்டம் குறைவாக இருக்க கூடும் என்பதால் முதலில் புத்தக கண்காட்சியை முழுமையாக ஒரு முறை சுற்றி பார்த்துவிடலாம் என்று கிளம்பினேன். பெட்ரோல் தட்டுபாடு சென்னையின் அன்றாட பயணத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. ஆவலாக புத்தகக் கண்காட்சிக்கு போய்வரலாம் என்று திட்டமிட்டிருந்த பல நண்பர்கள்  பெட்ரோல் கிடைக்காத காரணத்தால் வீட்டிலிருந்து வெளியே …

புத்தக கண்காட்சியில் சில மணி நேரம். Read More »

நடந்து தீராத கால்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார்.  எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரை என் மீது அதிக அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். புகழ் பெற்ற உலக இலக்கியப் புத்தகங்களை தந்து  என்னைப் படிக்க வைத்து, என் சிறுகதைகள் வெளியான நாட்களில் அதைப் பற்றி விவாதித்து எப்போதும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவரைச் …

நடந்து தீராத கால்கள். Read More »