admin

கழுமரம்

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement  என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the …

கழுமரம் Read More »

கற்கத்தவறிய பாடம்.

பள்ளிச் சிறுவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது என்று பையனிடம் கேட்டேன். ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் முட்டாள் என்று சொன்னான். இந்தச் சொல் இன்று நேற்றல்ல பள்ளி துவங்கிய காலத்திலிருந்து கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது . சிறுவர்களின் மிக முக்கியமான பிரச்சனை தான் முட்டாளா? அறிவாளியா ? என்பதே. அதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீயொரு முட்டாள் என்ற வசையைச் சந்திக்காத குழந்தைகளே  இல்லை என்று சொல்லலாம். …

கற்கத்தவறிய பாடம். Read More »

சிற்றுண்டி சினிமா

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் மாலைக்காட்சி முடிந்து இரவுக்காட்சி துவங்குவதற்கு முன்பு தியேட்டர் துப்பரவு பணியாயளர்கள் அரங்கினைச் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் தற்செயலாகக் காண நேர்ந்தது. ஆறு பேர் மிகப்பெரிய கறுப்பு நிற பாலீதின் பைகளில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். பாப்கார்ன், தண்ணீர்பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேக், பப்ஸ் என்று ஐந்து பைக்கும் அதிகமாக அள்ளியும் குப்பை தியேட்டர் முழுவதும் இறைந்தே கிடந்தது. ஒரு நிமிசம் அந்த குப்பைச் சாக்கை கண்டதும் திடுக்கிட்டு போனேன். உணவகங்களில் …

சிற்றுண்டி சினிமா Read More »

அப்பா புகைக்கிறார்

 -சிறுகதை தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை.  மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது. இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி …

அப்பா புகைக்கிறார் Read More »

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2.

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை. நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது? வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய …

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2. Read More »

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1.

காலம் : சர்வதாரி வருடம் தை 30.  ஹிஜ்ரி 1430 ஸபர் ரபிஉல் அவ்வல். பிப்ரவரி 2009. நேரம் இரவு. 10.37 சென்னை. ( பழைய பெயர் மதராஸ் அதற்கு முந்திய பெயர் மதராபட்டினம் ) தமிழ்நாடு. பழைய பெயர் ( சென்னை ராஜஸ்தானி ) தென்னிந்தியா. இந்தியா. ( சரித்திர நாவலை விமர்சனம் பண்ண வேண்டும் என்பதால் இவ்வளவு துல்லியமாக நாள் நேரம் போன்ற விபரங்களை எழுதி தொலைக்க வேண்டியுள்ளது. ) பூர்வாங்கம் சு. வெங்கடேசனின் …

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1. Read More »

இரண்டு ஆஸ்கார் படங்கள்

உலக சினிமாவில் உயர்ந்த விருது என ஒரு போதும் ஆஸ்கார் விருதை எவரும் குறிப்பிடுவது கிடையாது. கான்ஸ் விருதுக்கு கிடைக்கும் முக்கியத்துவமோ, பெர்லின் திரைப்பட விருதிற்கு கிடைக்கும் கௌரவமோ ஆஸ்காருக்கு கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் மற்ற உலகதிரைப்பட விழாக்களில் மிக மிக அரிதாகவே விருது பெறுகின்றன. இது தான் நடைமுறை உண்மை ஆனால் நமது ஊடகங்கள் ஆஸ்காருக்கு தரும் முக்கியத்துவம் எதையும் வேறு திரைப்பட விழாக்களுக்கு தருவதில்லை. சென்ற ஆண்டு கான்ஸ் …

இரண்டு ஆஸ்கார் படங்கள் Read More »

தினம் ஒரு கதை

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்றாம் வகுப்பில் படிக்கும் எனது பையன் ஆகாஷ் டிராகன் ஒன்றுக்கு பெயர் வைக்க வேண்டும். நல்லதாக ஏதாவது ஒரு பெயர் சொல்லுங்கள் என்று கேட்டான். எதற்காக என்றதும் ஆங்கிலத்தில் டிராகன் பற்றி தான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதில் வரும் டிராகனுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றான். டிராகனுக்கு என்ன பெயர் வைப்பது என்று  உடனே நினைவிற்கு வரவில்லை. ஏன் டிராகன்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. அத்தோடு …

தினம் ஒரு கதை Read More »

இரண்டு திரைக்கதையாசிரியர்கள்.

  ராபர்ட் டௌனி உலகெங்கும் திரைப்படக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இன்று வரை பாடமாக படிக்கும் திரைக்கதைகளில் ஒன்று சைனா டவுன். இதை எழுதியவர் ராபர்ட் டௌனி. ரோமன் பொலன்ஸ்கில்யின் இயக்கிய இந்த  திரைப்படத்திற்காக ராபர்ட் டௌனி ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார் பாடமாக படிக்கும் அளவு அப்படி என்ன இருக்கிறது சைனாடவுனில் ? ஒரு துப்பறியும் நிபுணரிடம் ஒரு பெண் தனது கணவன் மீது சந்தேகப்படுவதாக சொல்லி அவரை கண்காணிக்க  சொல்கிறாள். அவனும் கண்காணிக்கிறான். அதன் முடிவில் வேறு …

இரண்டு திரைக்கதையாசிரியர்கள். Read More »

கண்ணகியின் நிழலில்

ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல இயக்குனரான குருதத் சிலப்பதிகாரத்தை படமாக்க விரும்பினார். அந்தக் கதை அவரது சொந்த வாழ்வினை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.  கீதா தத் என்ற பாடகியைத் திருமணம் செய்து கொண்ட குருதத் தன் படங்களில் நாயகியாக நடித்த வகிதா ரஹ்மானை காதலித்து கொண்டிருந்தார். இரண்டு பெண்களும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். கீதா வங்களாத்தை சேர்ந்தவர். ராய் சௌத்ரி குடும்பத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் இசையில் பாடி மிகுந்த புகழ் பெற்றவர். …

கண்ணகியின் நிழலில் Read More »