பிரார்த்தனைக்கு அப்பால்.
மதுரையைச்சுற்றியுள்ள எட்டு மலைகளில் காணப்படும் சமணக் குகைகள், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருமோகூர், கூத்தியார்குண்டு, கிண்ணிமங்கலம், பெருங்காமநல்லுர், கீழக்குயில்குடி எனத் தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் எனது நண்பரான சேவியர் நீங்கள் அவசியம் இடைக்காட்டூரைப் பார்க்க வேண்டும், அது ஒரு கலை எழில் மிக்க தேவலாயம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். இடைக்காட்டூர் மதுரையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர். வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது. மதுரையைச் சுற்றிய கிராமங்களுக்கே உரியே தனித்துவமான தேநீர் கடைகளும், சிவப்பேறிய …