admin

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

நாளை (18.11.22 வெள்ளிகிழமை) மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். மதுரை ரோட்டிலுள்ள கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. பொதுநிகழ்ச்சி மாலை ஆறு மணிக்குத் துவங்குகிறது.

பௌத்த மேகம்

வியட்நாமைச் சேர்ந்த பௌத்த துறவி திக் நியட் ஹான் (Thich Nhat Hanh) ஒரு ஜென் மாஸ்டர். Order of Interbeing எனத் தனக்கென ஒரு பௌத்த நெறிமுறையை உருவாக்கிக் கொண்டவர். உலகச் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர். இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படம். திக் நியட் ஹான்2022 இல் இறந்தார். அவரது Plum Village இதனை வெளியிட்டுள்ளது.

சித்திரப் பூ விழி வாசலிலே

சித்திரப் பூ விழி வாசலிலே வந்து யார் நின்றவரோ என்ற பாடலை நேற்றிரவு கேட்டுக் கொண்டிருந்தேன். பி.சுசிலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடிய பாடல் இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்றது. எழுதியவர் கவிஞர் மாயவநாதன். எத்தனை அழகாக எழுதியிருக்கிறார் என்று வியந்து மறுபடியும் கேட்டேன். தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் மாயவநாதன். சிறந்த திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார். 35 வயதில் அமரராகிப் போனவர் மாயவநாதன். 10 ஆண்டுகளில் 24 படங்களில் மொத்தம் 54 பாடல்கள் …

சித்திரப் பூ விழி வாசலிலே Read More »

மாநில கல்விக்கொள்கை உருவாகிறது.

தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்விக்கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுகிறேன். நீதியரசர் முருகேசன் தலைமையில் இந்தக் கல்விக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இது போலக் கல்விக் கொள்கைக்கான குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு என்பேன். தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள். மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள். பெற்றோர்கள், கல்வியியல் அறிஞர்கள், பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் …

மாநில கல்விக்கொள்கை உருவாகிறது. Read More »

கண்ணுக்குத் தெரியாத பாதை

இருவேறு காலங்களில் பயணிக்கிறது மிமோசாஸ் (Mimosas) திரைப்படம். இரண்டினையும் இணைப்பது வியப்பான நிலப்பரப்பு. வாழும் போது நிலத்தோடு ஒருவருக்குள்ள பிணைப்பிற்கு இணையாதே மரணத்தின் பின்பு தனது சொந்த நிலத்தில் புதைக்கபடவேண்டும் என்பதும். அந்த ஆசையை நிறைவேற்றுவற்காக இருவர் மேற்கொள்ளும் கடினமான மலைப்பயணத்தையே படம் விவரிக்கிறது. பாதைகள் இல்லாத பயணம் ஒரு தளத்திலும் பாலைவனத்தில் டாக்சி ஒட்டுகளின் அதிவேகப் பயணம் வேறு தளத்திலுமாகப் படம் விரிவடைகிறது. வயதான ஷேக் தலைமையில் ஒரு சிறிய கேரவன் சிஜில்மாசா நகரத்தை நோக்கி …

கண்ணுக்குத் தெரியாத பாதை Read More »

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 17 துவங்கி 27 வரை நடைபெறுகிறது விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இந்தப் புத்தகத்திருவிழாவில் நவம்பர் 18 மாலை உரையாற்றுகிறேன் தலைப்பு : நினைவின் சித்திரங்கள்.

மணிபாரதி – அரவான்

எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நடத்துகிறார். இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிஸியோதெரபிஸ்டான மணிபாரதி தொடந்து அழகம்மை அரங்கம் சார்பாக நவீன நாடகங்களை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்னர் எனது “கொஞ்சம் இனிப்பு அதிகம்” என்ற சிறுகதையை நாடகமாக இயக்கியிருந்தார். ஞானராஜ சேகரன் ஐஏஎஸ்  “ராமானுஜன்” திரைப்படத்தில் மணிபாரதியை கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார்.  அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மணிபாரதி நடித்துள்ளார் …

மணிபாரதி – அரவான் Read More »

நெற்றியில் தேள் கொண்டவள்

ரஃபேல் வரைந்த எலிசபெத் கோன்சாகா உருவப்படத்தில் எலிசபெத்தின் நெற்றியில் ஒரு தேள் உருவம் காணப்படுகிறது. தேள் வடிவிலான தலைச்சுட்டி ஒன்றை எலிசபெத் அணிந்திருக்கிறார். இது அந்தக் காலத்தில் தீவினையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளம்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடியது என்கிறார்கள். நிஜமாகவும் இருக்கலாம், எலிசபெத்தின் நெற்றியிலுள்ள தேள் அவளது சோகமான, எதையோ சொல்ல முயன்று தயங்குகின்ற முகத்திற்குக் கூடுதல் வசீகரம் தருகிறது. இந்த ஓவியம் 1504ல் வரையப்பட்டது எலிசபெத் அர்பினோ டியூக்கின் மனைவி. கலை இலக்கியங்களில் தீவிர விருப்பம் …

நெற்றியில் தேள் கொண்டவள் Read More »

ஜாய்ஸின் டப்ளின்

ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய யூலிசிஸ் நாவலின் கடைசிவரி yes I said yes I will Yes. மோலியின் கூற்றாக வரும் இந்த வரியில் வரும் யெஸ் என்பது ஒரு இடைவெட்டு. ஒரு ஆமோதிப்பு. தளர்வு, எதிர்ப்பின் முடிவு, நிதர்சனமான உண்மை. கடந்தகாலத்தின் குரல் எனப் பல்வேறுவிதங்களில் சொல்லலாம். இந்த வரியை மிகவும் சோகமாக வரி எனக் குறிப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் இதை “the female word” என்கிறார். நாவலின் கடைசிப் பத்தி “I was a …

ஜாய்ஸின் டப்ளின் Read More »