admin

ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள்

எனது பள்ளியில் வாரம் ஒரு நாள் ஓவிய வகுப்பு இருந்தது அதில் முதலில் வரைய கற்றுக் கொள்ளும் போது மாணவர்கள் அனைவரும் காகம் வரைவார்கள். காகத்தை வரைவது எளிதானது. சிறிய கோடுகளால் எளிதாக வரைந்துவிட முடியும். ஆனால் அதில் துல்லியமிருக்காது. ஒரு குருவியை அல்லது புறாவை வரைவது அந்த வயதில் கடினமானது. ஆர்வமுள்ள சில மாணவர்கள் தோகை விரித்த மயிலை வரைவார்கள். துல்லியமாக வரைந்து பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரும் ஆந்தையை, மீன்கொத்தியை, மரங்கொத்தியை வரைய முற்பட்டதில்லை. …

ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள் Read More »

அரவான் நாடகம்

நான் எழுதிய அரவான் நாடகம் சிறந்த நடிகரும் பதிப்பாளருமான கருணாபிரசாத் இயக்கி நடித்து பல்வேறு ஊர்களில் நிகழ்த்தப்பட்டது அந்த நாடகம் தனி நூலாகவும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு குயின்மேரீஸ் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அரவான் நாடகம் மலையாளத்திலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளின் முன்பு புதுவையில் நாடக கலைஞர் சுகுமார் இந்த நாடகத்தை சிறப்பாக நிகழ்த்தினார். இப்போது இந்த நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி சிறுநாடகமாக உருவாக்கியிருக்கிறார் பத்துநிமிஷங்கள் கொண்ட நாடகங்களுக்கான விழாவில் இடம்பெறுகிறது Short+Sweet Theatre …

அரவான் நாடகம் Read More »

ரகசியக் கதைசொல்லி

ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் கதைத்தொகுப்பை எழுதியவர் யார் எனத் தெரியாது. அது ஒரு தொகைநூல். அதில் பல்வேறு காலகட்டங்களில் கதைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்று நாம் வாசிப்பது பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு பதிப்பு. அதிலிருந்து ஆங்கிலப்பதிப்புகள் வந்திருக்கின்றன. ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மொழியாக்கமும் இது போலச் சொந்த சரக்குகள் கொண்டதே என்கிறார்கள். இன்று அரபு மூலப்பிரதிகளுடன் ஒப்பிட்டு நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்படுகின்றன அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை மற்றும் …

ரகசியக் கதைசொல்லி Read More »

சேலத்தில்

சேலம் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசக சாலை இணைந்து நடத்தும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் எனது சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல் நாளை மாலை நடைபெறுகிறது.

காஷ்மீரின் குளிர் நிலவு

ஆஹா சாகித் அலியின் கவிதைகளை கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறுநூலாக வெளியாகியுள்ளது. The Country Without a Post Office என்ற இவரது கவிதைத் தொகுப்பினை வாசித்திருக்கிறேன். சிறந்த கவிதைகளைக் கொண்டது. ஆகா சாகித் அலி 1949ல் காஷ்மீரில் பிறந்தவர். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கேயே பல ஆண்டுகள் வசித்தவர். டிசம்பர் 8, 2001ல் மூளையில் ஏற்பட்ட கட்டியின் பாதிப்பால் காலமானார். புலம்பெயர்ந்த கவிஞராக அறியப்படும் சாகித் அமெரிக்காவில் வசித்தாலும் …

காஷ்மீரின் குளிர் நிலவு Read More »

செராபியத்தின் அழிவு

அகோரா 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இப்படத்தில் அலெக்சாண்ட்ரியாவின் புகழ்பெற்ற நூலகம் அழிக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. எதற்காக நூலகத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அறிவின் சேகரமாகவும் அறிவியலின் ஊற்றுக்கண்ணாகவும் அது செயல்படுகிறது என்பதால் தான். நூலகத்தைக் காப்பாற்றுவதற்காக அதன் மாணவர்கள் போராடுவதும் நூலக வளாகம் அடித்து நொறுக்கப்பட்டு ஏடுகள் தீக்கரையாவதைப் பார்த்தபடியே ஹைபேஷியா தப்பியோடுவதும் மனதை உலுக்கக்கூடிய காட்சிகள் இப்படம் 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, வானியலாளரும் தத்துவஞானியுமான ஹைபேஷியாவினை முதன்மைப்படுத்துகிறது. அத்தோடு அலெக்சாண்ட்ரியாவின் அன்றைய பெருமைகளையும் …

செராபியத்தின் அழிவு Read More »

அஞ்சலி

தனித்துவமிக்க சிறுகதை படைப்பாளியாகவும் இடதுசாரி சிந்தனை கொண்ட தீவிர சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கிய தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலி.

உறுபசி -வாசிப்பனுபவம்

அருளானந்தம் சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு என்று தொடங்குகிறது இந்த நாவல். சம்பத்தின் நண்பர்களான அழகர், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாழினி இவர்களின் வழியே சம்பத்தின் மனைவியாகிய ஜெயந்தியும் அவரவர் பார்வையில் சம்பத். யார் இந்த சம்பத்?அவன் ஏன் 42 வயதில் இறந்தான்? பதின் பருவத்தின் கனவுகள் மிகவும் அலாதியானவை கனவுகள் மட்டுமல்ல ஆச்சரியங்கள், நம்பிக்கைகள், மூடத்தனங்கள் மற்றும் புத்திசாலித்தனங்கள் அனைத்தும் தான்.கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை முதன்மை பாடமாகக் கொண்டு பயிலும் மாணவனாக சம்பத்.தமிழின் …

உறுபசி -வாசிப்பனுபவம் Read More »

ஞாபகக் கல்

புதிய சிறுகதை அரூ இணைய இதழில் வெளியானது •••சிறிய அலுமினிய டப்பா ஒன்றினுள் ஒரு கல்லையும் மூன்று சொற்கள் கொண்ட ஒரு துண்டு சீட்டினையும் அம்மா விட்டுச் சென்றிருந்தாள். இந்தப் பெட்டி அவளது பட்டுப்புடவைகளுக்குள் மறைத்து வைக்கபட்டிருந்தது. அம்மா இறந்தபிறகு அவளது பொருட்களை அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி அதன் சாவியை அப்பா வைத்திருந்தார். அதை நாங்கள் திறக்கவேயில்லை கோடை விடுறைக்கு அமெரிக்காவிலிருந்து லீலா தனது பிள்ளைகளுடன் வந்திருந்த நாளில் அவள்தான் அப்பாவிடம் கேட்டு பீரோ சாவியை …

ஞாபகக் கல் Read More »