ஓவியத்தில் சிறகடிக்கும் பறவைகள்
எனது பள்ளியில் வாரம் ஒரு நாள் ஓவிய வகுப்பு இருந்தது அதில் முதலில் வரைய கற்றுக் கொள்ளும் போது மாணவர்கள் அனைவரும் காகம் வரைவார்கள். காகத்தை வரைவது எளிதானது. சிறிய கோடுகளால் எளிதாக வரைந்துவிட முடியும். ஆனால் அதில் துல்லியமிருக்காது. ஒரு குருவியை அல்லது புறாவை வரைவது அந்த வயதில் கடினமானது. ஆர்வமுள்ள சில மாணவர்கள் தோகை விரித்த மயிலை வரைவார்கள். துல்லியமாக வரைந்து பாராட்டுப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரும் ஆந்தையை, மீன்கொத்தியை, மரங்கொத்தியை வரைய முற்பட்டதில்லை. …