ஓவியங்கள்

நிறங்களை இசைத்தல்

ராபர்ட் லாரன்ஸ் பின்யன் கலைவரலாற்றைப் பற்றிச் சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது Painting In The Far East கீழைத்தேயக் கலைகள் குறித்து மிகச் சிறந்த அறிமுகத்தைத் தருகிறது. மேற்கத்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கும், சீன ஜப்பானிய ஒவியங்கள் சிற்பங்களுக்குமான அடிப்படை வேறுபாடு மற்றும் தனித்துவம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த நூல் பல்வேறு ஒவியக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தாகூர் இதனைச் சாந்தி நிகேதனின் ஒவியப்பள்ளியில் ஆதார நூலாகப் பயிற்றுவித்திருக்கிறார். பின்யனை வாசிக்கும் போது தேர்ந்த பேராசிரியரிடம் …

நிறங்களை இசைத்தல் Read More »

ஓவியம் என்பது கனவு வெளி.

மார்க் சாகலின் (Mark Chagal) ஓவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் பார்த்திருக்கிறேன். மூல ஓவியங்களை நேரில் காணுவது பரவசமூட்டக்கூடியது. அதன் புகைப்படங்களையும் நகல் பிரதிகளையும் கண்டிருந்த போதும் அசல் ஒவியம் தரும் மகிழ்ச்சியும் வியப்பும் அலாதியானது. அப்படித் தான் சாகலின் ஓவியத்தின் முன்பு வியந்து போய் நின்றிருந்தேன். மறக்கமுடியாத அனுபவமது. சமீபத்தில் மார்க் சாகலின் ஓவியங்களைக் கொண்ட விரிவான நூல் ஒன்றை வாசித்தேன். ஓவியரைப் புரிந்து கொள்வதற்கு அவரது வாழ்க்கையும் பார்வைகளும் முக்கியமாகிறது. மார்க் சாகல் பெலாரசிய …

ஓவியம் என்பது கனவு வெளி. Read More »

வான் நோக்கும் கண்கள்

புகைப்படக்கலை அறிமுகமாவதற்கு முன்னால் மன்னர்களும் பிரபுக்களும் ஓவியர்களை வரவழைத்து தனது உருவத்தை வரைந்து கொள்வதை விருப்பமாகக் கொண்டிருந்தனர். இதனால் உருவப்படம் வரையும் திறமையான ஓவியர்களுக்குப் பெரிய கிராக்கியிருந்தது. இதில் ஏராளமான பணமும் கிடைத்தது. ஆனால் உருவப்படம் வரைவதில் திறமைசாலிகளாக இருந்தவர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள். அதுவும் மூத்த ஓவியர்கள். அவர்களை மீறிப் புதிதாக ஒரு இளம் ஓவியருக்கு வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். அதுவும் ஒரு பெண் ஓவியராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. இந்தத் தடைகளை மீறி ஓவிய …

வான் நோக்கும் கண்கள் Read More »

கலையில் கண்கள்

இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் கண்ணை வடிவமைப்பது முக்கியமானது. இந்தியக் கலைஞர்கள் கண்ணின் வழியே உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள். இந்திய இலக்கியத்தில் கண்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம். கண்களே உணர்ச்சிகளின் ஜன்னலாக இருக்கிறது. இந்திய ஓவியர்கள் கண்களை எப்படி வரைந்தார்கள். எத்தனை விதமான வடிவங்களில் கண்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கடவுளின் கண் எப்படியிருக்க வேண்டும் என்பது போல இந்தியக் கலையுலகில் கண்ணின் முக்கியத்துவத்தை விவரிக்கும் “The Eye In Art” என்ற புத்தகத்தைப் பப்ளிகேஷன் டிவிசன் வெளியிட்டிருக்கிறது. …

கலையில் கண்கள் Read More »

அக்காலம்- மஹாபலிபுரம்

அந்தக் காலத்தில் மஹாபலிபுரத்திற்கு படகில் போய் வந்திருக்கிறார்கள். அந்த நினைவுகளைச் சொல்லும் இந்தக் கட்டுரையை இன்று வாசிக்கையில் வியப்பாகவுள்ளது. ‘விவேக சிந்தாமணி’ இதழில் ச.ம. நடேச சாஸ்திரி எழுதிய குறிப்பு 1894 ஏப்ரலில் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தெற்கே செல்லுகிற தென்னிந்தியா இருப்புப்பாதை வழியாகச் செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய க்ஷேத்திரத்தை ஜட்கா வண்டிகள் மூலமாய்ச் சேரலாம். இந்தவிடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்படி ஜெட்காவிலேயே ஏறிச் சென்றால் யாம் தலைப்பில் குறித்த மஹாபலிபுரம் …

அக்காலம்- மஹாபலிபுரம் Read More »