காலைக் குறிப்புகள்

காலைக் குறிப்புகள் 31 கோமாளியின் துயரம்.

சொற்களை விடவும் கோடுகள் மூலம் தன்னை எளிதாக வெளிப்படுத்த முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். அப்படித் தான் இயக்குநர் பெலினி செயல்பட்டார்.  அவர் பேச நினைத்தவற்றை ஒவியங்களாக வரைந்தார். அசையும் ஓவியங்களாகவே அவர் திரைப்படங்களை உருவாக்கினார். பெலினியின் வாழ்க்கையை விவரிக்கும் I, Fellini என்ற Charlotte Chandler புத்தகத்தை வாசித்தேன். அதில் “Dreams are the only reality.” என  பெலினி  குறிப்பிடுகிறார். அவரது திரைப்படங்கள் அவரது கனவுகளின் வெளிப்பாடு போலவே உருவாக்கப்பட்டன. தன் வாழ்வில் உண்மையாக …

காலைக் குறிப்புகள் 31 கோமாளியின் துயரம். Read More »

காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம்.

நோபல் பரிசு பெற்ற பின்பு  ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி இனி தான் எழுதப்போவதில்லை. தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுத்தார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு. என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரேயொரு காரணமிருந்தது அது என் மகன் ஹிக்காரி. மூளை வளர்ச்சியற்ற அவன் நலமடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். அந்தப் பணியை சரியாக செய்துவிட்டதாக உணர்கிறேன். ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று பதில் சொன்னார் உங்கள் மகனுக்காக மட்டும் …

காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம். Read More »

காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்

எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தனது நேர்காணல் ஒன்றில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். அவற்றை என்ன செய்வார் என்று சொல்லவில்லை. கனவுகளிலிருந்து எழுதுவதற்கான கருவைப் பெறுவதாக எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ரஸ்கின் பாண்டிற்கும் கனவு வழிகாட்டவே செய்கிறது. திப்புசுல்தான் தனது கனவுகளை இது போலத் தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்துமிருக்கிறார். அவை தனி நூலாக வெளிவந்துள்ளன. ரஸ்கின் பாண்டின் சிறார்கதைகைள் தலைமுறைகள் …

காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும் Read More »

காலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்

லாக்டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாடத் துவங்கினார். ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகிவிடவே இரவு பதினோறு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார். மகனுக்கோ, மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டுவிடுவார்.  அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டியிருந்தது. இது போலவே காலை ஆறுமணிக்கெல்லாம்  கையில் காபியுடன்  மகளை விளையாட அழைக்க ஆரம்பித்துவிடுவார். இதனால் …

காலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள் Read More »

காலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம்

பிக்காஸோவை பற்றி ரே பிராட்பரி ( Ray bradbury) ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதன் பெயர் In a Season of Calm Weather. பாப்லோ பிக்காஸோ ஓவியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பிராட்பரி அவரை முக்கியக் கதாபாத்திரமாக்கி இக் கதையை எழுதியிருக்கிறார். ஜார்ஜ் ஸ்மித் என்ற அமெரிக்கன் தன் மனைவியுடன் பிரான்சிலுள்ள கடற்கரை ஒன்றுக்கு விடுமுறைக்குச் செல்கிறான். ஸ்மித் பிக்காஸோவின் தீவிர ரசிகன். பிக்காஸோவை ஒவியவுலகின் கடவுளாக நினைப்பவன். அவர்கள் விடுமுறைக்குச் சென்றிருந்த கடற்கரைக்குச் …

காலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம் Read More »

காலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்

ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவாவின் குறிப்பு ஒன்றில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது. ஒரு நாள் தோழியுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பாலத்தின் அருகில் ஏதோ யோசனையுடன் நின்றுவிட்டார். தோழி அவரிடம் என்ன யோசனை என்று கேட்டதற்குக் கவிஞரும் தன் தோழியுமான மரினா ஸ்வெட்டேவா எப்படியிருக்கிறாள் என்று விசாரித்திருக்கிறார். உடனே தோழி ஆச்சரியமாக, இதே இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா உன்னைப் பற்றி விசாரித்தாள். ஒரே இடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் …

காலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம் Read More »

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி

“அந்தோ”! என்றது எலி, “ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரியதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காகப் பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்”. “நீ உன் திசையை மாற்றவேண்டிய …

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி Read More »

காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல்

ஆர்தர் கோய்ஸ்லர் எழுதிய சந்நியாசியும் சர்வாதிகாரியும் என்ற கட்டுரைத் தொகுப்பினை ச.து.சு.யோகியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை ஆர்தர் கோய்ஸ்லரின் இந்த ஒரு புத்தகம் தான் தமிழில் வெளியாகியுள்ளது. பியர்ல் பப்ளிகேஷன் வெளியீடாக வந்த இந்த நூலில் நாவலாசிரியனின் மயக்கம் என்றொரு கட்டுரை உள்ளது. அந்தக் கட்டுரை எழுத்தாளன் எப்படி ஒரு நாவலை எழுத வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறது. தனி மனிதன் ஒரு அறைக்குள்ளிருக்கிறான். சமூகம் வெளியே இருக்கிறது. மூடப்பட்டிருந்த ஒரு ஜன்னலைத் திறந்து வெளியுலகைப் …

காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல் Read More »

காலைக் குறிப்புகள் 23 கடந்து செல்லும் காட்சி.

ஸ்டானிஸ்லாவ் டிகாத் புகழ்பெற்ற போலந்து எழுத்தாளர், நாடக ஆசிரியர் . இவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எழுதிய குறுங்கதை ஒன்றை சுகுமாரன் கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழுக்காக மொழியாக்கம் செய்து கொடுத்திருந்தார். தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற அந்தக் கதை மிகச்சிறப்பானது. கரமசேவ் சகோதரர்கள் நாவலை தஸ்தாயெவ்ஸ்கி ஏன் எழுதினார் என்பதற்கு இக் கதை ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இன்னொரு விதத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களில் ஒருவராகக் கடவுளுமிருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கதையில் வரும் கடவுள் …

காலைக் குறிப்புகள் 23 கடந்து செல்லும் காட்சி. Read More »

காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல்.

பீட்டர் புரூக் தயாரித்த மகாபாரதம் நாடகத்தை நேரில் கண்டதில்லை. 9 மணி நேரம் நடக்கக்கூடியது. பின்பு அது தொலைக்காட்சிக்கு ஏற்ப ஆறு மணி நேரத்திற்குள் குறைக்கப்பட்டது. இந்தத் திரைவடிவத்தைப் பார்த்திருக்கிறேன். ஜீன் கிளாடே கேரியர் தான் இதன் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். நாடக வடிவமும் அவர் எழுதியதே. பன்னாட்டுத் தயாரிப்பில் உருவான அந்த நாடகத்தில் திளெரபதியாக நடித்தவர் மட்டுமே இந்தியர். மல்லிகா சாராபாய் என்ற பரத நாட்டியக் கலைஞர். பீஷ்மர், அர்ச்சுனன். பீமன், கிருஷ்ணர் பற்றி நமக்கு …

காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல். Read More »