களக்காடு
நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ச்சி பெற்ற தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஒவியர்கள் 1792ல் கன்னியாகுமரி பகுதியில் பயணம் செய்த போது களக்காடு கோவிலை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள் 222 வருஷங்களுக்கு முந்தைய தமிழகத்தின் அரிய ஒவியக்காட்சியது, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ளது களக்காடு. இங்குள்ள சத்யவாகீஸ்வரர் கோவில் அழகிய ஒவியங்களும் இசைத் தூண்களும் சிற்பங்களும் கொண்டது, கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. சுற்றிலும் பசுமையான வயல்களையும், …