தோற்கடிக்கப்பட்டவனின் புன்னகை
“When I know your soul, I will paint your eyes.”- Amedeo Modigliani மோடிக்லியானி (Modigliani )புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் . 35 வயதில் இறந்து போனவர். மரணத்திற்குப் பிறகே மோடிக்லியானி பெரும்புகழை அடைந்தார். பாப்லோ பிகாசோவிற்கு இணையான திறமை கொண்டிருந்த போதும் அங்கீகாரம் கிடைக்காமலே இறந்து போனார். பெருங்குடிகாரர். போதை பழக்கம் கொண்டவர். இவரது காதல் வாழ்க்கையையும், பாரீஸில் நடைபெற்ற ஒவியப்போட்டியில் கலந்து கொள்வதற்காக முயன்ற நிகழ்வினையும் மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளது மைக் டேவிஸ் …