களக்காடு

நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ச்சி பெற்ற தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஒவியர்கள் 1792ல் கன்னியாகுமரி பகுதியில் பயணம் செய்த போது களக்காடு கோவிலை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள்

222 வருஷங்களுக்கு முந்தைய தமிழகத்தின் அரிய ஒவியக்காட்சியது,

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ளது களக்காடு. இங்குள்ள  சத்யவாகீஸ்வரர் கோவில் அழகிய ஒவியங்களும் இசைத் தூண்களும் சிற்பங்களும் கொண்டது,  கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. சுற்றிலும் பசுமையான வயல்களையும், குளங்களையும் கொண்டது களக்காடு.

வில்லியம் டேனியல் தனது பதினாறாவது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் அழைப்பில் இந்தியாவிற்கு வந்திருக்கிறார், அவரது மாமா தாமஸ் டேனியல் முன்னதாக இந்தியாவில் பிரிட்டீஷ் கம்பெனியின் ஒவியராகப் பணியாற்றியவர், இருவரும் இணைந்து தென்னாட்டில் பயணம் செய்து மதுரை. ராமேஸ்வரம், மகாபலிபுரம் உள்ளிட்ட பல முக்கிய ஊர்களை அரிய ஒவியமாக உருவாக்கியிருக்கிறார்கள்

இந்த ஒவியங்கள் Oriental Scenery என்ற தொகுப்பாக வெளியாகி உள்ளது.

0Shares
0