எனது பாடல்
வழியெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் கேட்டபடியே சென்னையில் இருந்து கன்யாகுமரி வரை காரில் சென்றேன், ஒரு சேரப்பாடல்களைக் கேட்பதில் உள்ள ஆனந்தத்திற்காகவே பயணம் போகலாம் என்றிருக்கிறது முப்பது வருசங்களாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்ற பாடல்கள் என்றாலும் அதன் புத்துணர்வும், இசை தரும் உற்சாகமான மன எழுச்சியும் அப்படியே இருக்கிறது, அதைத் தீராத மயக்கம் என்பதா. இல்லை நிகரற்ற அகத்தூண்டல் என்பதா, வேண்டும் வேண்டும் என்று மனம் எவ்வளவு பாடலைச் சுவைத்தாலும் திருப்தியுற மறுக்கிறது, இளையராஜா நம் காலத்தின் இசைப்பேராசான், தன்னிகரற்ற …