அறிவிப்பு

அறிமுக விழா

எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் எனது சிறுகதை புர்ராவை குறும்படமாக இயக்கியுள்ளார். இதன் அறிமுகவிழா வருகின்ற ஞாயிற்றுகிழமை ( 20.09.2015) மாலை ஐந்து முப்பது மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் நாள் : 20.09.2015 நேரம் : மாலை 5,30 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை …

அறிமுக விழா Read More »

தேவதச்சனுக்கு விருது

என் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் இந்த விருதை அளிக்கும் விஷ்ணுபுரம் வாசக வட்டத்திற்கும் நண்பர் ஜெயமோகனுக்கும் மிகுந்த நன்றி ••• 1952இல் பிறந்த தேவதச்சன் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோவில்பட்டியில் நகைவணிகம் செய்து வருகிறார். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். முதல் கவிதைத் தொகுப்பு ஆனந்த் உடன் சேர்ந்து வெளியிட்ட ‘அவரவர் கைமணல்’ அதை தொடர்ந்து அத்துவான …

தேவதச்சனுக்கு விருது Read More »

தமிழ் விக்கிபீடியா

பெரும்பான்மை கல்லூரி நிகழ்ச்சிகளில் என்னை அறிமுகப்படுத்தும் போது தமிழ் விக்கிபீடியாவில் உள்ள சுயவிபரக்குறிப்பை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எனது விக்கிபீடியா தகவல்களை யார் உருவாக்கினார்கள் எனத் தெரியவில்லை ஆனால் முழுமையான விபரங்களில்லை நான் மொழிபெயர்த்த ஆலீஸின் அற்புத உலகம் நூலை நான் எழுதிய புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறார்கள், குழந்தைகள் புத்தகமான ஏழுதலைநகரம் நான் எழுதிய நாவலாக இடம் பெற்றுள்ளது ( நாவல் என்ற சொல்லை தமிழ் விக்கிபீடியா பயன்படுத்தாது என்பது இன்னொரு விசித்திரம் ) எனது வாழ்க்கைக் …

தமிழ் விக்கிபீடியா Read More »

இந்திய வானம்

இந்த வாரம் முதல் ஆனந்தவிகடனில் புதிய தொடர் ஒன்றைத் துவங்கியிருக்கிறேன் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமான பலமுறை போய் வந்திருக்கிறேன், ஒவ்வொரு பயணமும் ஒரு படிப்பினையைத் தந்திருக்கிறது. இந்திய வானம் தொடரின் வழியாக இந்தியாவை ஒன்றிணைக்கும் புள்ளிகளை, மனிதர்களை, நிகழ்வுகளை, மகத்தான அறவுரைகளை, வழிகாட்டும் நெறிகளை, மனித மாண்புகளை, நம்பிக்கைகளை முதன்மைப்படுத்த விரும்புகிறேன் துணையெழுத்து, கதாவிசாலம், தேசாந்திரி, கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் என விகடனில் நான் எழுதிய தொடர்கள் வாசகர்களின் பேரன்பையும் பாராட்டையும் எனக்களித்தன, அந்தத் தொடர்களின் வரிசையில் …

இந்திய வானம் Read More »

பசுமை நடை 50

என் நண்பரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், எழுத்தாளருமான அ. முத்துகிருஷ்ணன் மதுரையில் பசுமை நடை என்ற அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழலையும் வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களையும் பாதுகாக்க மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் பசுமை நடை மதுரையைச் சுற்றியுள்ள சமண மலைகள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆர்வம் மிக்க இளைஞர்கள் பலரும் ஒன்று சேர்ந்து இயங்கும் பசுமை நடை தமிழகத்திற்கே முன்னோடியான சுற்றுசூழல் அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் விருட்சத்திருவிழா, பாறைத்திருவிழா என மிகச்சிறந்த இயற்கை …

பசுமை நடை 50 Read More »

திருவண்ணாமலையில்

நண்பர் பவா. செல்லதுரை தான் படித்த சிறந்த சிறுகதைகளைப்  பகிர்ந்து கொள்ளும் வண்ணம் கதை சொல்லும் நிகழ்ச்சி ஒன்றினை திருவண்ணாமலையில் தொடர்ச்சியாக நடத்திவருகிறார். நாளை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. குவா வாடீஸ், செங்கம் சாலை ,(சேஷாத்திரி ஆசிரமம் எதிரில் ) இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்க. வருகின்ற  ஞாயிற்றுகிழமை  (ஆகஸ்ட் 9 )  அன்று மாலை திருவண்ணாமலையில் கே. வி. ஷைலஜாவின்  படைப்புகள் ஒரு பார்வை என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. ஷைலஜா இந்த ஆண்டிற்கான …

திருவண்ணாமலையில் Read More »

டிஸ்கவரி புக் பேலஸ்

டிஸ்கவரி புக் பேலஸ் நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் இரண்டாம் பதிப்பை  வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகள். விலை ரூ 800 இதனை ஆன் லைனில் வாங்க https://discoverybookpalace.com/

வாழ்த்துகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் சார்பில் வழங்கப்படும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது  பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாசனுக்கும், மொழிபெயர்ப்பு விருது பெற்றிருக்கும் ஆர். சிவகுமாருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் •• சிற்பி இலக்கிய விருது பெற்றுள்ள கவிஞர் ரவி சுப்ரமணியன் அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். ••

மறுபதிப்பு

மதுரை புத்தகக் கண்காட்சிக்கு மறுபதிப்பு காணும் எனது நூல்கள். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்களை உயிர்மை அரங்கிலும், ஆன்லைன் மூலமும் பெறலாம் ••

அஞ்சலி

உலக அரங்கில் தமிழர்களுக்குப் பெருமை தேடி தந்த சிறந்த அறிவியலாளரும், உயர்ந்த பண்பாளரும் ,முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாமுக்கு என் அஞ்சலிகள். டாக்டர் கலாம் இளைஞர்கள் மீது  கொண்டிருந்த நம்பிக்கை அளப்பரியது. கல்வி குறித்துத் தன் வாழ்நாள் முழுவதும் கலாம் பேசிக் கொண்டேயிருந்தார். அந்தக் கனவை நினைவேற்றுவது அனைவரின் கடமை, கலாம் அவர்கள் புவியிலிருந்து மறைந்தாலும் அவர் உருவாக்கிய கனவுகள் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். •••