அறிவிப்பு

எனக்குப் பிடித்த கதைகள் 22

ஹாட் ட்ரிக்              எட்கர் கேரத் (இஸ்ரேல்) தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் ”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” ஆ, இதோ வருகிறது வெளியே. மாயாஜால நிகழ்ச்சியின் கடைசி வித்தை. தொப்பியில் இருந்து ஒரு முயலை வெளியே இழுக்கிறேன். எப்பவுமே நிகழ்ச்சி முடிகிற போது இதைச் செய்வேன், ஏனென்றால் குழந்தைகளுக்கு பிராணிகளைப் பிடிக்கும். குறைந்தபட்சம் நான் குழந்தையாய் இருந்தபோது பிராணிகளிடம் நான் பிரியம் வைத்திருந்தேன். நிகழ்ச்சி இந்த விதமாய் முடிந்தால் பளிச்னு இருக்கும், அப்படியே முயலை …

எனக்குப் பிடித்த கதைகள் 22 Read More »

மெல்லிசை மன்னர்

” இந்த உலகத்தில் எதையாவது மாற்றவேண்டும் என்றால் அது இசையால் மட்டுமே சாத்தியமாகும்.”  – ஜிமி ஹென்ரிக்ஸ் காலத்தால் அழியாத  தமிழ்திரைப்பாடல்களை அள்ளி வழங்கிய மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன் காலமானார். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

திங்கள்

எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் சக்திவேல் எனது கதை ஒன்றைக் குறும்படமாக இயக்கியுள்ளார். திங்கள் என்ற இக்குறும்படத்திற்கான கதை வசனத்தை நான் எழுதியிருக்கிறேன். இயக்குனர் அருண்மொழி முக்கியக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். https://youtu.be/R5ysOHh3WqI

வங்கப்பஞ்சம்

1943. வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது இருபதாம் நூற்றாண்டின் மிக மோசமான பஞ்சங்களில் ஒன்று என விவரிக்கபடும் அதில் முப்பது லட்சத்திற்கும் மேல் மக்கள் இறந்து போனார்கள், பஞ்சம் பிழைக்க வங்களா கிராமப்புறங்களிலிருந்து கல்கத்தாவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள், உணவு கிடைக்காமல் பட்டினியில் இறந்து போனவர்களின் உடல்கள் கல்கத்தா வீதிகளில் இறைந்து கிடந்தன, அந்தப் பஞ்சத்தை விளக்கும் ஆவணப்படத்தின் ஒரு பகுதியிது. பிமல்ராய் இயக்கியது https://youtu.be/QI6qg1ERmGE

நிகழ்ச்சிகள்

தஞ்சாவூரில் நடைபெறுகின்ற புத்தகத்திருவிழாவில் 19.06.2015 வெள்ளிக்கிழமை அன்று  மகாகவி தாகூர் குறித்து உரையாற்றுகிறேன். இடம்  அரண்மனை வளாகம். தஞ்சாவூர் நேரம் மாலை 6 மணி •• சென்னையில் நடைபெறும் எஸ்பிஒஏ கல்வி, கலை, சூழல் விழா 2015ல் மாற்றுக்கல்வி குறித்து 21.06.15 ஞாயிறு மதியம் 2 மணிக்கு உரையாற்றுகிறேன், இடம் எஸ்பிஒஏ அரங்கம். அண்ணாநகர் •• எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் குற்றபரம்பரை நாவல் வெளியீடு வருகின்ற 21.06.15 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளது. …

நிகழ்ச்சிகள் Read More »

காக்காமுட்டை / கலந்துரையாடல்

காக்காமுட்டை மிகச்சிறந்த திரைப்படம். நேற்றிரவு இயக்குநர் மணிகண்டனைச் சந்தித்து எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பாக  இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உடன் மணிகண்டன்  என் வீட்டிற்கு வந்து புதிய திரைப்பட முயற்சிகள் குறித்து உரையாடியது நினைவிருக்கிறது. அப்போது மணிகண்டன் தனது விண்ட் என்ற குறும்படத்தின் டிவிடியை கொடுத்து பார்க்கும்படி சொன்னார். மிகச்சிறந்த குறும்படமது. இன்று உலகத்தரமிக்க  திரைப்படம் ஒன்றை இயக்கி பெரும் வெற்றியைத் தொட்டிருக்கிறார். பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டு பாராட்டுகளை …

காக்காமுட்டை / கலந்துரையாடல் Read More »

உருவாக்கம்

தற்செயலாக எனது எழுத்துகளை வாசிக்கத் துவங்கி அதிலிருந்து தன்னை ஒரு கவிஞரான வளர்த்துக் கொண்ட கவிஞர் மாதவன் அதிகன் குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

கதை படித்தல்

வருகின்ற சனிக்கிழமை 13.06.2015 மாலை ஐந்தரை மணிக்கு சாகித்ய அகாதமி சார்பில் நடைபெறும் கதாசந்தி நிகழ்வில் பசித்த மிருகம் என்ற எனது புதிய சிறுகதையை வாசிக்க இருக்கிறேன். கதை வாசித்தலைத் தொடர்ந்து இக்கதை உருவான விதம் குறித்த உரையும் எனது சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது நிகழ்ச்சி நடக்குமிடம் : பாரதீய வித்யாபவன். சிற்றரங்கு. மயிலாப்பூர்.  சென்னை நேரம் :  5:30 pm நாள்:  13.06.2015 சனிக்கிழமை. (அரங்கம் மயிலாப்பூர் கபாலி கோவில் அருகில், …

கதை படித்தல் Read More »