தொலைக்காட்சி ஒளிபரப்பு

சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன் நியூஸ் தொலைக்காட்சி தினமும் மதியம் 3 மணிமுதல் 4 மணி வரை ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி  ஒன்றினைத் தயாரித்து வழங்குகிறது
இதில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டிவி சேனலில் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல்முறை
நாளை சனிக்கிழமை 10. 1. 2015 மதியம் 3 மணிக்கு உயிர்மையின் சார்பில் எனது சஞ்சாரம் நாவல் வெளியீட்டு நிகழ்வு ஒளிபரப்பாகிறது
இந்நிகழ்வில் நண்பர் மனுஷ்யபுத்திரன் முன்னிலையில் அண்ணன் ச. தமிழ்செல்வன் நாவலை வெளியிட இயக்குனர் சீனுராமாமி பெற்றுக் கொண்டார்
அதைத் தொடர்ந்து சஞ்சாரம் நாவல் குறித்த  வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன் .
நண்பர் நெல்சன் சேவியர் இதனை ஒருங்கிணைப்புச் செய்துள்ளார்.
மதியம் 3 முதல் 4 வரையிலும், இரவில் 11 முதல் 12 வரையும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்
••
சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுக்கிழமை (11.1.2015) மதியம் 3 மணி முதல் 4 வரை நடைபெற உள்ள இதே நிகழ்ச்சியில் வாசகர்கள் போனில் என்னுடன் உரையாடலாம்.
இது நேரலை ஒளிபரப்பாகும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் சன்நியூஸ் ஒளிபரப்பில் தெரிவிக்கப்படும்
•••
0Shares
0