அறிவிப்பு

விழா

2013 வரை வெளியாகியுள்ள எனது சிறுகதைகள் யாவும் ஒன்றாகத் தொகுக்கபட்டு மூன்று தனித்தொகுதிகளாக வெளியாக உள்ளன. அத்துடன் சிறார்களுக்காக எழுதியுள்ள நாவல், உலகசினிமா குறித்த கட்டுரைத் தொகுதி உள்ளிட்ட புத்தகங்கள் ஜனவரி 8ம் தேதி வியாழன் மாலை சென்னை, ரஷ்யக்கலாச்சார மையத்தில்  வெளியிடப்பட உள்ளன. நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்

சஞ்சாரம் ப்ரோமோ பிலிம்

திரைப்பட இணை இயக்குனரும் இலக்கிய வாசகருமான ஹரிகோபி எனது நாவல் சஞ்சாரம் குறித்து இரண்டு நிமிஷம் ஒடக்கூடிய ப்ரோமோ பிலிம் ஒன்றினைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இலக்கியத்தை நேசிக்கும் திரைக்கலைஞர்கள், குறும்பட இயக்குனர்கள் தாங்களாக முன்வந்து இது போன்ற உதவிகளை மேற்கொள்வதன் வழியே வாசிப்புப் பரவலாகும். அதற்கான முன்முயற்சியாகவே இதைக் கருதுகிறேன். ஹரிகோபிக்கும், அவரது குழுவினர்களுக்கும் எனது அன்பும் பாராட்டுகளும். நண்பர்கள் இந்த வீடியோ இணைப்பை பகிரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் https://www.youtube.com/watch?v=6NBkunT8Eik&feature=youtu.be

சஞ்சாரம் புகைப்படங்கள்

டாக்டர். இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் நண்பர் குறிஞ்சில் பிரபா நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் நண்பர் பிரபாகர் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் தோழர் டி. லட்சுமணன் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் தஞ்சை பல்கலை கழக மேனாள் துணைவேந்தர் திரு. ராஜேந்திரன் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் போலீஸ் டெபுடி கமிஷனர் திரு. செந்தில்குமார் நாவலின் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார் பேராசிரியர் அருணன் சிறப்புரை ஆற்றுகிறார் Photo credits:  Prabhu …

சஞ்சாரம் புகைப்படங்கள் Read More »

சஞ்சாரம் – வெளியீட்டுவிழா

நேற்று எனது சஞ்சாரம் நாவல் வெளியீட்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பிய கூட்டம். கவிஞர் ரவி சுப்ரமணியம் ஔவையாரில் துவங்கி கல்யாண்ஜி வரை தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைப் பாடலாகப் பாடினார் அற்புதமான குரல். அருமையாகப் பாடினார். அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியம் நாவலை வெளியிட ஜென் ராம் பெற்றுக் கொண்டார். அதை அடுத்து பேராசிரியர் அருணன் சஞ்சாரம் நாவல் குறித்து அறிமுகவுரையை வழங்கினார், நாவலை முழுமையாகப் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்த அருணன் இந்த …

சஞ்சாரம் – வெளியீட்டுவிழா Read More »

சஞ்சாரம் வெளியீட்டு விழா

எனது புதிய நாவல் சஞ்சாரம் வெளியீட்டு விழா ஜனவரி 4 மாலை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் நடைபெற உள்ளது அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

சஞ்சாரம் நாவல்

இன்றைய ஆங்கில ஹிந்து நாளிதழில் எனது புதிய நாவல் சஞ்சாரம் குறித்து நண்பர் கோலப்பன் எழுதியிருக்கும் பதிவு. Thanks : The Hindu. 27.12.2014

பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள் சார்பாக நாளை நடைபெறும் எனது புத்தக வெளியீடு •• இடம் :  தெய்வநாயகம் பள்ளி.  வெங்கட் நாராயணா சாலை, தி. நகர் ( திருப்பதி தேவஸ்தானத்திற்கு நேர் எதிரில்) நேரம்  : மாலை 5 மணி நாள் : 27 டிசம்பர் 2014 அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

அந்நிய நிலத்தின் பெண்

நாளை நடைபெறும் நண்பர் மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் *** எனக்குப் பிடித்த மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உன் பிறந்த தினத்தில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் சந்தித்துக்கொண்ட ஆண்டின் உன் முதல் பிறந்த தினத்தில் எவ்வளவு இளமையாக இருந்தாயோ அப்படித்தான் இன்றும் இருக்கிறாய் அன்று முத்தமிட்டபோது எப்படிக் கண்ணீர் சிந்தினாயோ அப்படித்தான் இன்றும் கண்ணீர் சிந்துகிறாய் அன்று உனக்கு என்ன பிரார்த்தனை இருந்ததோ அதேதான் இன்றும் உனக்கு அன்று அந்த …

அந்நிய நிலத்தின் பெண் Read More »