அறிவிப்பு

பதாகை

எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கான பதாகை ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது இணைய இதழ்களில் பதாகை குறிப்பிடத்தக்க ஒன்று. சிறந்த கவிதைகள், மொழியாக்கங்கள், கதைகளை வெளியிடுகிறார்கள். இதில் உள்ள நாஞ்சிலின் பேட்டி மிகச்சிறப்பாக வந்துள்ளது. அவரது பன்முகப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவடன் இயல்பான செறிவான கருத்துகளைக் கொண்டிருக்கிறது. இது போலவே நாஞ்சிலோடு பழகிய அனுபவம் குறித்த அம்பை மற்றும் அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் சிறப்பாக உள்ளன. சுரேஷ் கண்ணனின் கட்டுரையும், சிவானந்தம் நீலகண்டன் கட்டுரையும் எனக்குப் பிடித்திருந்தன. தமிழ் இலக்கியத்தின் மிகமுக்கியப் படைப்பாளியான …

பதாகை Read More »

முகாம்- அறிவிப்பு

டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து மே 16 மற்றும் 17 தேதிகளில் சிறார் இலக்கிய முகாமினை திருவண்ணாமலையில் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். இந்த முகாமில் சிறுவர்களுக்கான 12 முக்கிய நூல்கள் விவாதிக்கபட உள்ளன. 1. மாகடிகாரம் – விழியன் – புக்ஸ் பார் சில்ரன் 2. வாத்துராஜா –விஷ்ணுபுரம் சரவணன்- பாரதி புத்தகாலயம் 3. சிரிக்கும் வகுப்பறை – எஸ்.ராமகிருஷ்ணன்– வம்சி பதிப்பகம் 4. பச்சைநிழல் –உதயசங்கர் – என்.சி.பி.ஹெச். வெளியீடு 5. ஜிமாவின் …

முகாம்- அறிவிப்பு Read More »

சிறார் இலக்கிய முகாம்

டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் வருகிற மே 16 மற்றும் 17 தேதிகளில் குழந்தைகள் இலக்கியம் குறித்து இரண்டு நாள் முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதில் குழந்தை இலக்கிய நூல்கள், தமிழ் காமிக்ஸ், கதை சொல்லும் நிகழ்வு , உலகப்புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம், குழந்தைகள் சினிமா ஆகிய அமர்வுகள் இடம் பெற உள்ளன. எழுத்தாளர்கள், கதை சொல்லிகள், ஒவியர்கள், குறும்பட இயக்குனர்கள் எனப் …

சிறார் இலக்கிய முகாம் Read More »

பிறந்த நாள்

இன்று (13.04.2015) எனது பிறந்த நாள். தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்துகளைத் தெரிவித்த எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. ••

செகாவ் வாழ்கிறார்

“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஏழடி நிலம் தான்“ “இல்லை, சவத்திற்குத் தான் ஏழடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“ எனத் தனது குறிப்பேடு ஒன்றில் செகாவ் கூறுகிறார். இந்தக் குறிப்பை வாசிக்கும் போதெல்லாம் மனது மிகுந்த கிளர்ச்சி அடைகிறது. டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதை How Much Land Does A Man Need , இதில் ஆறு அல்லது ஏழு அடி தான் ஒரு மனிதனுக்குக் கடைசியில் தேவை என்பதை டால்ஸ்டாய் வலியுறுத்துகிறார். …

செகாவ் வாழ்கிறார் Read More »

வாழ்த்துகள் மணிகண்டன்

கவிஞரும் தீவிர இணையச் செயல்பாட்டாளருமான வா.மணிகண்டன் பெங்களூரு வாசகர் சந்திப்பில் தொடர்ச்சியாகச் சிறுகதைகளை முன்வைத்துக் கூட்டங்களை நடத்திவருகிறார். இந்த முயற்சிக்கு உறுதுணையாக நான் தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து விவாதித்து வருகிறார்கள். 100 சிறந்த சிறுகதைகள் நூலை உருவாக்கும் போது இப்படியான செயல்பாடுகளுக்குத் துணையாக இத் தொகுப்பு அமைய வேண்டும் என்பதே எனது முக்கிய விருப்பமாக இருந்தது அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் மணிகண்டனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் …

வாழ்த்துகள் மணிகண்டன் Read More »

புத்தகம் பேசுது

புத்தகம் பேசுது இதழில் சஞ்சாரம் நாவலுக்கு  தே. லட்சுமணன் எழுதியுள்ள விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நன்றி புத்தகம் பேசுது. மார்ச் 2015