உயிர்மையில்
உயிர்மை மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார் எழுதிய விமர்சனம் வெளியாகியுள்ளது நன்றி: உயிர்மை
உயிர்மை மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து லஷ்மி சரவணக்குமார் எழுதிய விமர்சனம் வெளியாகியுள்ளது நன்றி: உயிர்மை
கணையாழி மார்ச் 2015 இதழில் சஞ்சாரம் நாவல் குறித்து ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய விரிவான விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது நன்றி: கணையாழி
எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான சா. தேவதாஸ் அவர்களுக்கு இந்த ஆண்டிற்குரிய மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கபட்டுள்ளது. லடாக்கிலிருந்து கவிழும் நிழல் என்ற பபானி பட்டாச்சார்யா நூலின் மொழிபெயர்ப்பிற்காக இந்த விருது அளிக்கபடுகிறது. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள குறிப்பு
ஆறு முதல் பனிரெண்டு வயதுள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக இரண்டு விளையாட்டுப் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறேன். விளையாட்டுப் புத்தகங்கள் என்றால் என்ன ? வெறுமனே பக்கங்களைப் புரட்டிக் கதையைப் படித்துப் போவதற்குப் பதிலாகக் கதையில் சில சிக்கல்கள், சவால்கள், புதிர்களை இடம்பெறச்செய்து படிப்பவர் தன் கையில் உள்ள பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அதற்கு ஏற்ப அந்தச் சிக்கலை, சவாலை எதிர் கொண்டு கடப்பதே விளையாட்டுப் புத்தகம் எனப்படுகிறது. ஐரோப்பிய மொழிகளில் …
நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற சஞ்சாரம் நாவலின் விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் விநாயகமுருகன். தமிழ்மகன். தீபா ஆகியோர் தங்களின் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் நாவல் எழுதுவது குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். சிறப்பான இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்த நண்பர் வேடியப்பனுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள் அத்தனை பேருக்கும் மனம் நிரம்பிய நன்றி
எனது புதிய நாவல் “சஞ்சாரம்” குறித்த விமர்சனக்கூட்டம் பிப்ரவரி 7 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளது வரவேற்புரை : மு.வேடியப்பன் நாவல் குறித்துப் பேசுபவர்கள் விநாயக முருகன் ஜா.தீபா தமிழ் மகன் இதனைத் தொடர்ந்து நாவல் குறித்து வாசகர்களுடன் கலந்துரையாடுகிறேன். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ** Discovery bookpalace 6, Munusamy Salai, K .K. Nagar Chennai – 600083
சென்னை புத்தகக் கண்காட்சியில் நாளை 17ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜென் கதைகள் குறித்துப் புத்தன் சொல்லாத கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் . கண்காட்சி வளாக அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது *** கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் 1) பௌன்சர் -அலெக்ஸாண்ட்ரோ ஜோடோரோவ்ஸ்கி – முழுநீள கிராபிக் நாவல். – லயன் காமிக்ஸ் 2) காளிதாசனின் கதை – சைலேஷ் -பப்ளிகேஷன்ஸ் டிவிசன் 3) கூண்டுப்பறவை ஏன் …
நண்பர் பெருமாள்முருகனின் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவரது எழுத்துரிமையை காக்க ,கருத்துரிமைக்கு ஆதரவாக படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டுகிறேன் Thanks : The New Indian Express-Vellore
சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன் நியூஸ் தொலைக்காட்சி தினமும் மதியம் 3 மணிமுதல் 4 மணி வரை ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைத் தயாரித்து வழங்குகிறது இதில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிவி சேனலில் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல்முறை நாளை சனிக்கிழமை 10. 1. 2015 மதியம் 3 மணிக்கு உயிர்மையின் சார்பில் எனது சஞ்சாரம் நாவல் வெளியீட்டு நிகழ்வு ஒளிபரப்பாகிறது இந்நிகழ்வில் நண்பர் மனுஷ்யபுத்திரன் …