ஷாஜியின் வலைப்பக்கம்.
என் நண்பரும் இசைவிமர்சகருமான ஷாஜி ஆங்கிலத்தில் தனது புதிய வலைப்பக்கத்தை துவக்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உயிர்மை இதழில் அவர் எழுதி வருகின்ற மேற்கத்திய இசை மற்றும் இந்திய திரையிசை சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பரந்த வாசகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஷாஜி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். இவரது கட்டுரைகளை ஜெயமோகன் தமிழாக்கம் செய்துவருகிறார். பல்வேறு புகழ்பெற்ற இசை நிறுவனங்களில் ஆலோசகராக , நிர்வாகியாக பணியாற்றியவர். தமிழ் திரையிசை குறித்து விரிவான அறிதலும் தனித்துவமான பார்வைகளும் கொண்டவர் ஷாஜி. …