அந்நிய நிலத்தின் பெண்
நாளை நடைபெறும் நண்பர் மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் *** எனக்குப் பிடித்த மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உன் பிறந்த தினத்தில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் சந்தித்துக்கொண்ட ஆண்டின் உன் முதல் பிறந்த தினத்தில் எவ்வளவு இளமையாக இருந்தாயோ அப்படித்தான் இன்றும் இருக்கிறாய் அன்று முத்தமிட்டபோது எப்படிக் கண்ணீர் சிந்தினாயோ அப்படித்தான் இன்றும் கண்ணீர் சிந்துகிறாய் அன்று உனக்கு என்ன பிரார்த்தனை இருந்ததோ அதேதான் இன்றும் உனக்கு அன்று அந்த …