அறிவிப்பு

நன்றி

உதவியாளர்கள் தேவை என்ற அறிவிப்பிற்கு நூற்றுமுப்பது பேர் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்கள். அதில் இருவர் தேர்வு செய்யப்பட்டனர் மற்றவர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. அனைவரின் அன்பான ஒத்துழைப்புக்கும் நன்றி ••

உரத்தநாட்டில்

நாளை (05/07/2014) உரத்தநாட்டில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியின் துவக்கவிழாவில் உரையாற்றுகிறேன். இதற்காக இன்றிரவு தஞ்சை செல்கிறேன். வோட்ஸ்வொர்த் புத்தக நிலையம் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. இடம்   : ரெங்கமணி கல்யாண மண்டபம் உரத்தநாடு

உதவியாளர்கள் தேவை

திரைப்படத்துறையில் என்னோடு இணைந்து வேலை செய்வதற்கு உதவியாளர்கள் தேவை. விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களைப் பற்றிய சுயவிபரத்துடன் தொலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் writerramki@gmail.com

கதைகள் காத்திருக்கின்றன

நாடகக் கலைஞர் ஜெயராவ் சிறந்த நடிகர், பயிற்சி வல்லுனர். கூத்துப்பட்டறையில் பயின்ற கலைஞர். இவர் தியேட்டர் லேப் என்ற நடிப்புப் பயிற்சி மையத்தைக் கே.கே. நகரில் நடத்தி வருகிறார். தியேட்டர் லேப் கடந்த பத்து ஆண்டுகளாக நவீன நாடக தயாரிப்புகளிலும், இளம் நடிகர்களை உருவாக்குவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது, பள்ளி கல்லூரிகளுடன் இணைந்து நாடகப்பயிற்சி கொடுப்பது, சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்களுக்குப் பயிற்சி தருவது, தமிழின் முக்கிய நாடகபிரதிகளை மேடையேற்றுவது எனத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறது தியேட்டர் …

கதைகள் காத்திருக்கின்றன Read More »

முகாமில் சந்திப்போம்

ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள நாவல் இலக்கிய முகாமிற்கு நிறைய வாசகர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. முகாமினைச் சிறப்பிக்க முக்கிய எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் இருந்து வரும் வாசகர்கள் நண்பர் வேடியப்பனுடன் இணைந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் வாசகர்கள் நேரடியாக முகாம் நடைபெறும் லைப் சென்டர், திண்டுக்கல் வளாகத்திற்கு வந்து சேர்ந்து கொள்ளவும். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் செல்லும் …

முகாமில் சந்திப்போம் Read More »

முகாம் நடைபெறும் இடம்

ஜுன் 14 மற்றும் 15 களில் நாவல் இலக்கிய முகாம் நடைபெறும் லைப் சென்டர் என்ற வளாகம் திண்டுக்கல்லில் இருந்து பத்துகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் செல்லும் பேருந்து ( 1 நம்பர் பேருந்து ) ஏறி இருபது நிமிசப் பயணத்தில் பதனீர்கடை என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கவும் பேருந்து வந்த வழியிலே பத்தடிகள்  நடந்து சென்றால், வலது பக்கம் செல்லும் சாலை பிரியும், அதில் இரண்டு நிமிசத் தூரத்தில் உள்ளது லைப் …

முகாம் நடைபெறும் இடம் Read More »

தேர்வு

ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் சிறுமலையில் நடைபெற உள்ள நாவல் இலக்கிய முகாமில் விவாதிப்பதற்காக ஐந்து நாவல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.முகாமில் கலந்து கொள்ளும் நண்பர்கள் இவற்றை வாசித்துவந்தால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும். 1.            மிளிர் கல் – இரா. முருகவேள் 2.            6174 – க.சுதாகர் 3.            விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் -சி.மோகன் 4.            ஒநாய்குலச்சின்னம் – ஜியாங் ரோங் 5.            தனிமையின் நூறு ஆண்டுகள் -கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் •••

தமிழிசை மேதை

புதுச்சேரியை சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் நான் மதிக்கும் சிறந்த தமிழ் ஆய்வாளர், அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தமிழிசை மேதை குடந்தை ப.சுந்தரேசனார் குறித்து அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் இது. *** தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணி தமிழுலகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பணியாகும். இந்த இசையறிஞரின் வாழ்க்கையையும், …

தமிழிசை மேதை Read More »

நிமித்தம் விமர்சனக்கூட்டம்

படி அமைப்பின் சார்பில் நிமித்தம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது, சமீபத்தில் காலமான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மற்றும் நேற்று காலமான இலக்கிய வாசகர் அன்புசிவன் இருவருக்குமான மௌன அஞ்சலியைச் செலுத்திக் கூட்டம் துவங்கியது. அன்புசிவன் ஒரு அற்புதமான மனிதர், இலக்கியத்தை மிகவும் நேசித்தவர், அவரைப் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறேன், அவரது இழப்பு மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியது நந்தனம் கல்லூரியில் பணியாற்றும் பேராசியர் ராமன் நிமித்தம் குறித்து ஒரு …

நிமித்தம் விமர்சனக்கூட்டம் Read More »