மதுரையில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை. தோழர் எஸ். ஏ. பெருமாள். எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித். கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் எஸ்வி வேணுகோபால். டாக்டர் வெங்கடாசலம், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், ஆகியோருக்கும், உயிர்மை பதிப்பகத்திற்கும், நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும், செல்விக்கும், தொகுத்து வழங்கிய கவிஞர் ஆத்மார்த்திக்கும், , வருகை தந்த வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி.



நீரிலும் நடக்கலாம், காஃப்கா எழுதாத கடிதம் என்ற இந்த இரண்டு புத்தகங்களும் மதுரை புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதை ஆன்லைன் மூலமும் பெற்றுக் கொள்ளமுடியும்.



