திரைப்பட இணை இயக்குனரும் இலக்கிய வாசகருமான ஹரிகோபி எனது நாவல் சஞ்சாரம் குறித்து இரண்டு நிமிஷம் ஒடக்கூடிய ப்ரோமோ பிலிம் ஒன்றினைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
இலக்கியத்தை நேசிக்கும் திரைக்கலைஞர்கள், குறும்பட இயக்குனர்கள் தாங்களாக முன்வந்து இது போன்ற உதவிகளை மேற்கொள்வதன் வழியே வாசிப்புப் பரவலாகும். அதற்கான முன்முயற்சியாகவே இதைக் கருதுகிறேன்.
ஹரிகோபிக்கும், அவரது குழுவினர்களுக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்.
நண்பர்கள் இந்த வீடியோ இணைப்பை பகிரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
https://www.youtube.com/watch?v=6NBkunT8Eik&feature=youtu.be

