அறிவிப்பு

பாராட்டு விழா

கனடா தேசத்தின் இலக்கியத்தோட்டம் வழங்கும் சர்வதேச இலக்கிய விருதான இயல்விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு உயிர்மை சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது இந்த விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெற இருக்கிறது இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இந்திரா பார்த்தசாரதி,  பேராசிரியர் ஞானசம்பந்தம், …

பாராட்டு விழா Read More »

காந்தி அவதூறுகள்

பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்கு பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கபடுவது என்று பதில் சொல்ல தயங்கிவிட்டுவிட்டேன், அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும் போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது Mahatma Gandhi was invited to take participate in …

காந்தி அவதூறுகள் Read More »

ஏழு பேருரைகள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா . தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும். பாஷோவின் ஜென் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்.  ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் , ஹோமரின் இலியட் உள்ளிட்ட எனது உலக இலக்கியப்பேருரைகளின் ஏழு டிவிடிகளையும் வாங்குவதற்கு ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது உடுமலை டாட்காமில் இந்த டிவிடிகள் கிடைக்கின்றன https://udumalai.com/?name=&type_id=44 தமிழ்நாட்டிற்குள் தேவைப்படுகின்றவர்கள் attcharam@gmail.com முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பவும் , அல்லது 94451 91114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் **

இயல் விருது

2011 ம் ஆண்டுக்கான இயல் விருது எனக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கனடா தேசத்தில் இருந்து வழங்கப்படும் புகழ்பெற்ற சர்வதேசிய இலக்கிய விருதாகும், வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருதாக வழங்கப்படுகிறது . 1500 கனேடிய டாலர் பரிசுத்தொகையும் பாராட்டு பத்திரமும் கொண்டது, இதற்கான விருது வழங்கும்விழா ஜுன் மாதம் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது, அதில் கலந்து கொண்டு விருது பெற இருக்கிறேன் சுந்தர ராமசாமி, ஜோர்ஜ் எல் ஹார்ட், அம்பை, கோவை ஞானி, …

இயல் விருது Read More »

பெரியார் விருது

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி, சமூகத்தில் சிறந்து விளங்கும் தமிழர்களைப் பாராட்டும் விதமாகப் “பெரியார் விருது” வழங்கி வருகிறது. திரு கி.வீரமணி அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் அமைப்பிது. இவ்வாண்டிற்கான ’பெரியார் விருது’ எனக்கு அளிக்கப்படுவதாக பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவித்துள்ளது இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 15 முதல் 17 வரை நடைபெற உள்ள பெரியார் முத்தமிழ் மன்றத்தின் தைப்பொங்கல் விழாவில் நடைபெறும். **

சவரக்குறிப்புகள்

கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற அரங்காடல் நாடக நிகழ்வில் எனது சிறுகதையை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நாடகமான சவரக்குறிப்புகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது என்று கனடாவில் இருந்து நண்பர் நாராயணமூர்த்தி தகவல் அனுப்பியிருந்தார். நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றம் செய்த மனவெளி கலையாற்றுக்குழு மற்றும் இந்த நாடகப்பிரதியை உருவாக்கிய திரு. செழியன். நெறியாள்கை செய்த திரு. அ.புராந்தகன். ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் **

எழுத்தின் திசை

பத்திரிக்கையாளர் நந்தினி கிருஷ்ணன் சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்து நிறைய வாசித்து அறிந்தவர், ஆங்கிலத்தில் கதைகள் எழுதிக் கொண்டு வருகிறார் தற்போதைய தமிழ் இலக்கியப்போக்குகள், சவால்கள், மற்றும் எனது கதையுலகம் குறித்து என்னோடு கலந்துரையாடல் செய்து A writer’s road  என்ற விரிவான கட்டுரை ஒன்றினை Fountain Ink magazine ல் எழுதியிருக்கிறார், அதற்கான சுட்டி https://fountainink.in/?p=875 முழுமையான கட்டுரையை அவரது வலைப்பக்கத்தில் வாசிக்கலாம் அதற்கான சுட்டி https://disbursedmeditations.blogspot.com/2012/01/writers-road.html ••

பேருரைகளின் வீடியோ

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றிய ஏழு பேருரைகளும் தனித்தனி டிவிடிகளாக முறையாக எடிட் செய்யப்பட்டு எழுத்தாளர்களின் புகைப்படங்கள், மற்றும் நாவலின் திரைவடிவத்தில் இருந்து தேவையான காட்சிகள் இணைக்கப்பட்டு வெளியாகி உள்ளது இந்த வீடியோக்களை அட்சரம் வெளியிட்டிருக்கிறது, இரண்டுமணி நேரமுள்ள ஒரு டிவிடியின் விலை ரூ100, ஏழு டிவிடிகளும் மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ600 விலையில் கிடைக்கும், டிவிடி கூரியரில் அனுப்புவதற்கு ஒரு டிவிடிக்கு ரூ 25 சேர்த்து அனுப்பவும். டிவிடி தேவைப்படுகின்றவர்கள் 9445191114 என்ற எண்ணில் தொடர்பு …

பேருரைகளின் வீடியோ Read More »

புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள், வாசகர்கள், அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த ஆண்டு உங்களுக்கு பெரிய வெற்றிகளையும் நல்ல ஆரோக்கியத்தையும், மேன்மையான எண்ணங்களையும், சந்தோஷமான உறவுகளையும் தருவதற்கு வாழ்த்துகிறேன். ** புது வருசத்தை கவிதையோடு துவங்குவோம் ஒரம்போகியாரின் ஐங்குறுநூற்று கவிதையிது புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகள் இவள் பாணர் நரம்பினும் இன் கிளவியளே. நீராடும் பெண்கள் குளிப்பதற்கு முன்பாக தன்னுடைய அணிகலன்களை கழட்டிக் கரையில் …

புத்தாண்டு வாழ்த்துகள் Read More »