அறிவிப்பு

நேர் நோக்கும் கண்கள்.

இனிமையான பாடல். சிறப்பான காட்சிகள். கறுப்பு வெள்ளைக் காட்சிகள் மிகுந்த நெருக்கம் தருகின்றன. இந்தப் பாடலுக்குள் எத்தனையோ சொல்லப்படாத கதைகள் மறைந்திருப்பதை உணர முடிகிறது. Tony Allen – Go Back (feat. Damon Albarn) [Official Music Video] directed by Bernard Benant

கறுப்பும் வெள்ளையுமான வாழ்க்கை

– தமிழ்மதி நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம். தேவராஜ் எனும் சிறுவனுக்குத் தனது ஒன்பது வயதில் குளிர் காய்ச்சல் வந்ததில் இருந்து காது கேட்காது. அதனைத் தொடர்ந்து அவன் அனுபவிக்கும் தொடர் புறக்கணிப்புகளும், துரத்தும் அவமானங்களுமாக நித்தம் நித்தம் பெருங்கசப்பை அருந்தும் தேவராஜின் கதையே நிமித்தம். தன்னைச் சரிவரப் புரிந்து கொள்ளாத குடும்பம், தோசைக்கரண்டியால் அடிக்கும் தந்தை, இவர் தனது மூத்த மகனுக்கு மட்டும் பால்கோவா வாங்கி வருவார். காது கேட்க வேண்டி கோவில் கோவிலாக அலையும் …

கறுப்பும் வெள்ளையுமான வாழ்க்கை Read More »

அறியப்படாத வரலாறு

மறைக்கப்பட்ட இந்தியா – நூல் அறிமுகம் – சசிகலா ரகுராமன் “மகாத்மா” என்றால் காந்தியடிகள் மட்டுமே என நினைத்துக் கொண்டிருப்பவரா நீங்கள் ? இந்திய மன்னர்கள் கோட்டைகளையும் கோவில்களையும் கட்ட மட்டுமே ஆதரவு அளித்தார்கள் என்ற உங்களுடைய எண்ணம் சரிதானா ? வெள்ளைக்காரர்கள் வருகைதான் இந்தியாவில் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தியது என நினைக்கிறீர்களா ? எனில், நீங்கள் அவசியம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். இந்தியாவின் புதைக்கப்பட்ட அருமை …

அறியப்படாத வரலாறு Read More »

நிலோஃபர். நிஜாம்

துருக்கி அரசகுமாரி நிலோஃபர். நிஜாம் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். உடனடியாக அசோகமித்ரனின் நினைவு தான் வந்த்து. இந்த இளவரசியைப் பற்றி அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். சிறிய பதிவு. ஆனால் அதற்குள் பெரிய கதை மறைந்திருக்கிறது நடைவெளிப் பயணம் நூலில் அசோகமித்ரன் நான் சிறுவனாக இருந்தபோது குடிசையிலிருந்து அரண்மனை வரை புகைப்படங்கள் இல்லாத வீடே இருக்காது. அன்று சுருள் ஃபிலிம் வரவில்லை. எல்லாம் ‘பிளேட்’ புகைப்படங்கள். ஆதலால் படத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மிகத் தெளிவாக …

நிலோஃபர். நிஜாம் Read More »

மலையாளத்தில்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. இதனை மாத்ருபூமி பதிப்பகம் வெளியிடுகிறது

மறைமலையடிகள் நாட்குறிப்புகள்

மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரையில் எழுதிய நாட்குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்தில் இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் நூலின் தொகுப்பாசிரியர் மறை. திருநாவுக்கரசு, மறை. தி. ஆலங்காடன். தி. தாயுமானவன். இந்த நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்திருக்கிறார் தனித்தமிழ் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள் இளமைப்பருவம் முதல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர் என்பதால் தனது நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ள இந்த நாட்குறிப்புகளிலிருந்து தேர்வு …

மறைமலையடிகள் நாட்குறிப்புகள் Read More »

உண்மையான பரிசு

எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளை எப்படிப் புரிந்து கொள்வது. நேற்று வரை சரியாக நடந்த விஷயம் இன்று நடக்க மறுப்பது ஏன். நாம் விரும்பாத மாற்றம் நடந்துவிடும் போது எப்படி ஏற்றுக் கொள்வது. இந்தக் கேள்விகளுக்கான பதிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது Who are you? அனிமேஷன் திரைப்படம். ஒரு எழுத்தாளருக்கும் பரிசுப் பொருளை ஒப்படைக்க வந்த இளம்பெண்ணிற்குமான உரையாடலின் வழியே செயலூக்கத்திற்கான வழி அடையாளம் காட்டப்படுகிறது 13 நிமிஷத்துக்குள் எத்தனை நிகழ்வுகளை, மாற்றங்களை அழகாகச் சித்தரித்துள்ளது என வியப்பாக உள்ளது. …

உண்மையான பரிசு Read More »

வனம் புகுதல்

Shinrin-Yoku, (Forest Bathing) என்ற இந்த ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 14 விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஜப்பானியர்கள் அடர்ந்த காட்டிற்குள் செல்லும் பயணத்தை Forest bathing (Shinrin-Yoku)என்கிறார்கள் அவர்கள் ஷின்ரின்-யோகுவை சிகிட்சை முறையாக மேற்கொள்கிறார்கள். காட்டின் விநோத ஓசைகள், மரங்களின் வாசனை, இலைகள் வழியாக கசியும் சூரிய ஒளி, சுத்தமான காற்று – இவை உடலுக்கும் மனதிற்கும் நலமளிக்கின்றன இயற்கையின் வழியே நமது ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் மீட்டெடுக்கலாம். ஆகவே வனக் குளியலை ஆரோக்கியத்திற்கான வழிமுறையாக கொள்கிறார்கள். ஷின்ரின்-யோகு …

வனம் புகுதல் Read More »

முதல்வர் சந்திப்பு

மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் விதமாக முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழுவினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது . இதில் நானும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் துணை வேந்தர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் …

முதல்வர் சந்திப்பு Read More »

கவிஞர் வெய்யில் படைப்புலகம்

கவிஞர் வெய்யில் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஆகுதி நடத்துகிறது. ஜுன் 19 ஞாயிறு, சென்னை மைலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று வெய்யில் கவிதைகள் குறித்து உரையாற்றுகிறேன் எனது அமர்வு காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது நிகழ்வில் கோணங்கி, வசுமித்ரா, வெண்ணிலா, முத்துராசா குமார், காளிபிரசாத், ம.கண்ணம்மாள், ஜா. ராஜகோபாலன், மனோமோகன், வேல்கண்ணன், செந்தில் கரிகாலன், ந.பெரியசாமி, ராஜேஷ், ஜீவலட்சுமி, பேராசிரியர் அரங்க மல்லிகா பேராசிரியர் ரவிக்குமார் …

கவிஞர் வெய்யில் படைப்புலகம் Read More »