அறிவிப்பு

குறுங்கதைகள் விமர்சனம்

பொன் மாரியப்பன். தூத்துக்குடி. காலச்சுவடு 2021 ஆகஸ்ட் மாத இதழ் வாங்கினேன். 21 குறுங்கதைகளில் தங்களின் 3 குறுங்கதைகள் படித்தேன். மூன்றும் வாசிப்பில் இனிமையும் மாற்றத்தையும் உருவாக்கியது. இது போன்ற குறுங்கதைகள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்பேன். பதினேழாவது ஆள் பழைய நிழற்படத்தைக் கொண்டு வாசிக்கும் எல்லோருடைய மனதிலும் பதினேழாவது ஆள் தோன்றி மறைகிறான்.அது தான் மனசாட்சி. அந்த நிழற்படத்தின் பதினேழாவது தான் என்னை எழுத வைக்கிறது.ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் குரூப் போட்டோ தூசி தட்டப்படும். நினைவுகள் …

குறுங்கதைகள் விமர்சனம் Read More »

காலச்சுவடு இதழில்

இம்மாத காலச்சுவடு இதழில் எனது மூன்று குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு கதை வைக்கம் முகமது பஷீரைப் பற்றியது. குறுங்கதைகளின் சிறப்பிதழாக காலச்சுவடு வெளியாகியுள்ளது.

கன்னடத்தில்

எனது இந்தியா கன்னடத்தில் தொடராக வெளியாகிறது. அவதி இணைய இதழில் இந்தத் தொடர் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே. நல்லதம்பி. கன்னடத்திலிருந்து தமிழுக்கு சிறந்த நூல்களை மொழியாக்கம் செய்திருப்பவர். இது போலவே தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். அவருக்கு என் அன்பும் நன்றிகளும். இணைப்பு

இரவின் இனிமை

யாமம் – நாவல் குறித்த விமர்சனம் ஏழுமலை •• எஸ் ராமகிருஷ்ணனின் வெயிலை போலவே இரவும் எத்தனை இனிமையானதாக இருக்கிறது நெடுங்குருதி வெயில் மையச் சரடாக வும் தொன்மை படிமமாகும் பின்னப்பட்டிருக்கும் இந்த நாவலில் இரவும் வரலாறும் அத்தர் வாசனையும் மையச் சரடாக இருக்கிறது. யாமம் என்றால் இரவு, இரவை போல விளங்கமுடியாத இருளாக மனிதர்களும் அவர்களின் அகமும் இருக்கிறது என்பதையே இந்த யாமம் . ஒரு ஞானியிடம் இருந்து அத்தர் தயாரிக்கும் முறையைப் பெறும் அப்துல் …

இரவின் இனிமை Read More »

மன்னா மெஸ்

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 99வது கிலோ மீட்டர், அச்சிறுப்பாக்கத்தில் உள்ளது மன்னாமெஸ் (MANNA MESS) சுவையான அசைவ உணவுகளைப் பராம்பரிய முறையில் தயாரிக்கிறார்கள். மதுரை செல்லும் போது அங்கே சாப்பிட்டிருக்கிறேன். மிகச் சுவையாக இருந்தது. ஜெயராஜ் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் தேசாந்திரியின் புத்தகங்கள் யாவும் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன. நெடுஞ்சாலைப் பயணத்தில் எனது புத்தகங்கள் தேவைப்படுகிறவர்கள் இங்கே வாங்கிக் கொள்ளலாம்

ஆங்கில வெளியீடு

எனது உறுபசி நாவலின் ஆங்கில மொழியாக்கம் CHRONIC HUNGER, இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பேராசிரியர் வெங்கடாசலம். தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது விலை ரூ 200 சிறார்களுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நாவலின் ஆங்கில மொழியாக்கம் Whirling Swirling Sky, இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. கீதா தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது விலை ரூ 180 எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு THE TWO BUBBLES இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பேராசிரியர் ராம்குமார் தேசாந்திரி …

ஆங்கில வெளியீடு Read More »

நைல் நதி சாட்சிகா

எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது. நைல் நதி சாட்சிகா என்ற இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பாலாஜி. இவர் சாகித்ய அகாதமிக்காக எனது சஞ்சாரம் நாவலையும் தெலுங்கில் மொழியாக்கம் செய்து வருகிறார் Nylu nadhi sakshiga (Short Stories)S. Ramakrishnan’s tamil stories translated by Gillella Balaji விலை ரூ 120 தொடர்புக்கு Desanthiri Pathippagam : D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil …

நைல் நதி சாட்சிகா Read More »

எலியின் சாகசம்

கலை கார்ல்மார்க்ஸ் திருவாரூர். எலியின் பாஸ்வேர்டு நூல் பற்றிய வாசிப்பனுபவம். ••• நூல் : எலியின் பாஸ்வேர்டு ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் விலை : ரூ.35 பதிப்பகம் : தேசாந்திரி இது குழந்தைகளுக்கான / சிறுவர், சிறுமியர்களுக்கான படைப்பு. தொன்று தொட்டு இயங்கி வரும் உணவுச்சங்கிலியில் பாம்புக்கும் எலிக்குமான பிணைப்பில், எது பிழைக்கும் என்ற கேள்வியில், வலியதே பிழைக்கும் என்பதே விடையாய் உள்ளது. எப்படியும் இறுதியில் வெல்வது பாம்புகளாகவே உள்ளன. உயிர்கள் தோன்றிய காலம் தொட்டே வலியது …

எலியின் சாகசம் Read More »

மலையாளத்தில்

மாத்யமம் மலையாள இதழில் எனது பஷீர் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பொன்மனை வல்சகுமார்.

லேண்ட்மார்க் நினைவுகள்

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லேண்ட்மார்க் புத்தகக் கடை செயல்பட்ட நாட்களில் வாரம் மூன்றோ, நான்கோ முறை அங்கே போய்விடுவேன். புத்தகக் கடைகளுக்குப் போவதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது சில நேரம் மதியம் இரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தால் மாலை வரை அங்கேயே புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். கடை ஊழியர்கள் பலரும் நண்பர்களாகி இருந்த காரணத்தால் எதுவும் கேட்கமாட்டார்கள். பொதுவாகவே அங்கே நாம் எந்தப் புதிய நூலையும் கையிலெடுத்து நின்றபடியே படித்துக் கொண்டிருக்கலாம். மதிய நேரங்களில் …

லேண்ட்மார்க் நினைவுகள் Read More »