அறிவிப்பு

அஞ்சலி

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளியான டொமினிக் ஜீவா மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் மல்லிகை இதழின் வழியே சிறந்த முற்போக்கு படைப்பாளிகளை உருவாக்கியவர். 1966 துவக்கபட்ட மல்லிகை 2012 வரை 401 இதழ்கள் வெளியாகியிருக்கிறது. இது தனித்துவமான சாதனையாகும். ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் டொமினிக் ஜீவா அவர்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

ஆன்டன் செகாவ் பிறந்தநாள்.

இன்று ஆன்டன் செகாவின் பிறந்த நாள். 161 வது பிறந்த நாளிது. இந்த நாளில் அவரை மானசீகமாக வணங்குகிறேன். ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியான அவரது வாழ்க்கை வரலாற்றை செகாவ் வாழ்கிறார் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறேன். செகாவ் பற்றி விரிவான உரையும் நிகழ்த்தியிருக்கிறேன். செகாவின் பிறந்த நாளில் அவரது சிறுகதை தொகுப்பிலிருந்து ROTHSCHILD’S FIDDLE, THE BLACK MONK என்ற இரண்டு கதைகளை வாசித்தேன். இப்போது தான் எழுதி வெளியானது போல புத்துணர்வு. அலங்காரமில்லாத எளிமை. …

ஆன்டன் செகாவ் பிறந்தநாள். Read More »

நன்றி

எனது மகன் ஹரியின் White Knights Creative Agency நிறுவனத்தைத் துவக்கி வைத்து வாழ்த்திய திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன், திரு. சீனு ராமசாமி, திரு. ஆனந்த சங்கர் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றி இந்த நிகழ்வை வாழ்த்திய நண்பர்கள். வாசகர்கள். அன்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் தொடர்புக்கு https://www.whiteknights.in/ https://www.facebook.com/Whiteknightsofficial

திறப்பு விழா

ஜனவரி 28 காலை ஒன்பதரை மணிக்கு ஹரியின்  White Knights நிறுவனத்தை திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன். திரு. சீனுராமசாமி, திரு. ஆனந்த் சங்கர் ஆகியோர் இணையவழியாக துவக்கி வைத்து வாழ்த்துகிறார்கள். தொடர்பு கொள்ள : Instagramhttps://instagram.com/whiteknights_creativeagency?igshid=19mo8wijzaqsnTwitterhttps://twitter.com/white_knightsof?s=20Contact number:+91-8939329251

புதிய நிறுவனம்

எனது மகன் ஹரி பிரசாத் White Knights என்ற Creative Agency ஒன்றினை ஜனவரி 28 வியாழன் அன்று துவக்குகிறான். ஹரியும் அவனது நண்பர்களும் ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அனைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் பயின்றவர்கள். பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கான இந்த நிறுவனம் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் வடிவமைப்புப் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும். குறிப்பாகப் பிராண்டிங், அனிமேஷன், லோகோ டிசைனிங், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வது, போட்டோ ஷுட், இணையதள …

புதிய நிறுவனம் Read More »

கன்னிமாரா நூலகத்தில்

சென்னை கன்னிமாரா நூலகத்தினுள் புதுப்பிக்கபட்ட நிரந்தர புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கப்பட்டது. பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இதனைத் தொடங்கி வைத்தார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகத்திற்கெனத் தனி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. எனது நூல்கள் யாவும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன.

திசை எட்டும்

சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குறிஞ்சி வேலன் மொழிபெயர்ப்பிற்கென்று திசை எட்டும் இதழை மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த கொரோனா காலத்தில் இதழைத் தயாரிப்பது கடினமான பணி. அதிலும் சிறப்பாக முயன்று திசை எட்டும் 65-66 வது இதழைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் இந்த இதழில் எனது இரண்டு குமிழ்கள் சிறுகதையை வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வின்சென்டிற்கு எனது அன்பும் நன்றியும்

பொங்கல் புத்தகத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேட் சென்டர் எதிரில் PMAC EXPO HALLல் ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 5 தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இந்தக் கண்காட்சி செயல்படும் வழக்கமாக நடைபெறும் நந்தனம் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு தாமதமாகிற காரணத்தால் சிறிய புத்தகக் கண்காட்சியினை சென்னை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் ஐம்பது …

பொங்கல் புத்தகத் திருவிழா Read More »

துணையெழுத்து சிறப்பு பதிப்பு

ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ள துணையெழுத்து ,சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது இதன் விலை ரூ 475 தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/