இலக்கியம்

நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள்

ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டரின் கவிதை ஒன்றின் வழியே தான் சீனக்கவிஞர் லி சிங்-சாவ் (Li Ch’ing-chao )பற்றி அறிந்து கொண்டேன். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெண்கவியை நினைவு கூர்ந்து மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். காட்டுவாத்துகளுடன் லிசிங் சாவ் பனிக்காலத்தை எதிர் கொண்டதை பற்றிப் பேசும் இந்தக் கவிதையின் வழியே பனிமூட்டத்திற்குள் ஒளிரும் நட்சத்திரம் போல லிசிங் சாவ் அறிமுகமானார். கடந்த சில நாட்களாக லி சிங் சாவோவின் உலகிற்குள் புகை போலச் …

நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள் Read More »

சாண்டில்யனின் மறுபக்கம்

சாண்டில்யன் தனது சுயசரிதையைச் சிறிய நூலாக எழுதியிருக்கிறார். போராட்டங்கள் என்ற இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் சாண்டில்யன் எழுத்தாளரான விதம் மற்றும் அவரது கல்லூரி நாட்கள். பத்திரிக்கை துறையில் வேலை செய்த அனுபவங்கள். தமிழ், தெலுங்கு படங்களுக்குத் திரைக்கதை எழுதும் போது கிடைத்த அனுபவம். சந்தித்த மனிதர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆங்கிலப்படங்கள் மீது சாண்டில்யனுக்கு இருந்த தீராத ஆசை வியப்பூட்டுகிறது. அந்தக் கால ஆங்கிலப்படங்களைத் தேடித்தேடி …

சாண்டில்யனின் மறுபக்கம் Read More »

அன்பு மட்டுமே எல்லாம்

‘மண்டியிடுங்கள் தந்தையே’ வாசிப்பனுபவம் டாக்டர் மதன்குமார் தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மகனின் ஒரு வித்தியாசமான போராட்டத்தையும் (இளம் வயதில் ஒருவாறாக வயது முதிர வேறொரு விதமாக), தன்னைக் காதலித்துப் பிள்ளையைக் கொடுத்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளாத ஒருவரை எந்தவித கோபமும் வெறுப்பும் இல்லாமல் அணுகும் ஒரு பெண்ணையும், தன் கணவனின் கடந்த காலத்தை அறிந்து அவர் இப்போது அப்படியில்லை என்று அறிந்தும் அவர் எங்கே தன்னைப் பிரிந்து விடுவாரோ என்ற ஏக்கமும் அவரின் மீது …

அன்பு மட்டுமே எல்லாம் Read More »

மஞ்சள் நிறத் தனிமை

ந.ஜயபாஸ்கரனின் அறுந்த காதின் தனிமை கவிதைத் தொகுப்பைப் படித்தேன் மிகச்சிறந்த கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. ஜயபாஸ்கரன் நாம் கொண்டாட வேண்டிய மிக முக்கியமான கவிஞர். மதுரையில் வெண்கலப் பாத்திரங்கள் விற்கும் சிறு வணிகராக வாழ்ந்து வரும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருகிறார். இந்தத் தொகுப்பிலுள்ள அவரது கவிதைகள் வான்கோவினைப் போலவே தீவிர மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன தனது கவிதைகளில் வான்கோவின் அறுந்த காதினை ஒரு குறியீடாக மாற்றியிருக்கிறார் ஜயபாஸ்கரன். அது கொரானோ காலத்தில் உறைந்து …

மஞ்சள் நிறத் தனிமை Read More »

நீதி மறுக்கப்பட்ட மனிதன்

மஞ்சுளா இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காகக் காத்திருப்பது, நீதி கிடைக்காத போது யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன என்று இந்த நூலின் முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுவது போல் வரலாறு நெடுகிலும் நீதியின் குரல் நெறிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இடக்கை நாவல் முழுக்க நீதி மறுக்கப்பட்ட மனிதனின் துயரக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் எஸ்.ரா. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்குகிறது …

நீதி மறுக்கப்பட்ட மனிதன் Read More »

இரண்டு யசோதரா

சித்தார்த்த யசோதரா’ என்ற நாவலை வாசித்தேன் சிங்கள எழுத்தாளர் சோமா ஜயகொடி எழுதிய இந்த நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் சரோஜினி அருணாசலம். குமரன் புத்தக இல்லம் வெளியிட்டுள்ளது புத்தரின் மனைவியான யசோதராவின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் அவர்களின் காதல், திருமணம், புத்தரின் துறவு பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் யசோதராவிற்கும் புத்தருக்குமான பந்தம் ஜென்ம ஜென்மமாகத் தொடர்வது என்பதே மைய இழையாக உள்ளது. ரோஹிணி நதி நீரைப் பங்கு போடுவதில் சாக்கிய வம்சத்திற்கும் கோலிய …

இரண்டு யசோதரா Read More »

சொல்லப்படாத வாழ்க்கை.

தி.லட்சுமணன். நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைப் பற்றி நாவல்கள் எழுதப்படுவது மிகவும் குறைவு. இத்தகு சுழலில் எஸ்.ராமகிருஷ்ணன் “நிமித்தம்” என்ற சிறப்பான நாவலைப் படைத்துள்ளார். அந்த நாவலில் வரும் தேவராஜ் காதுகேளாத மாற்றுத்திறனாளி, அவன் தன் வாழ்க்கையில் காது கேளாத காரணத்தால் எவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது என்பதைச் சிறப்பாக விளக்குகிறார். நாவலின் முதல் அத்தியாயத்திற்கு “அவனது இரவு” என்ற தலைப்பிட்டு ஆசிரியர் கதையைத் துவக்குகிறார். அந்த ஒர் இரவுதான் அவனுடைய …

சொல்லப்படாத வாழ்க்கை. Read More »

நாதஸ்வரத்தின் பின்னால்

கோபாலகிருஷணன் கணேசன் சஞ்சாரம் நாவல் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு முறை எஸ். ரா வின் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போதும் மனதில் விட்டில் பூச்சிகள் அலைவதைப் போல நினைவுகளும் வலிகளும் அலையத் துவங்கிவிடுகிறது. திடீரென்று எனது ஊரில் யாராவது நாதஸ்வரம் வாசித்திருக்கிறார்களா? என்று யோசித்துப் பார்த்தேன். கோவில் கொடையில் நாயனம் வாசித்தது நினைவிற்கு வந்தது. மற்றபடி எங்கள் ஊர் முருகன் கோவிலில் அன்றாடம் சிறிது நேரம் ஒருவர் நாயனம் வாசிப்பது வழக்கம். அதைத்தவிர வேறு எதுவும் நாதஸ்வரம் …

நாதஸ்வரத்தின் பின்னால் Read More »

வேம்பலையும் இன்றைய உலகச் சவால்களும்

”நெடுங்குருதி” பற்றிய பார்வை சுரேஷ் பாபு நெடுங்குருதி நாவலைப் பற்றி எழுத நினைக்கும்போது The Origins of Political Order எழுதிய Francis Fukuyama இந்தியா மற்றும் சீனாவைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. சீனாவின் சர்வாதிகாரமோ அல்லது இந்தியாவின் ஜனநாயகமோ திடீரென இன்று உருவாவனதில்லை, மாறாக இந்த இயல்புகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் நீடிக்கின்றன, பல ஆட்சியாளர்கள் மாறியபோதும் இந்த நாடுகள் அவற்றின் ஆதார குணம் மாறாமல் தான் இருக்கின்றன. Three Gorges …

வேம்பலையும் இன்றைய உலகச் சவால்களும் Read More »

புத்தகங்களின் மீதான ஆசை

The Groaning Shelf and other instances of book love என்ற புத்தகத்தைப் படித்தேன். பிரதீப் செபாஸ்ட்டியன் எழுதியது. புத்தகப்புழுவாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பிரதீப் தனது சேமிப்பிலுள்ள புத்தகங்களை எப்படிக் கையாளுகிறார். அரிய நூல்கள் வாங்கும் ஆசை உருவான விதம். மற்றும் தன்னைப் போன்ற புத்தக நேசர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார். நீண்ட கால வாசிப்பு மற்றும் தீராத புத்தக் காதலே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம். தீவிரமாக புத்தகங்களைச் சேகரித்துப் …

புத்தகங்களின் மீதான ஆசை Read More »