இலக்கியம்

கடலில் ஒரு காதல்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான பால் வான் ஹெய்ஸேயின் “L’Arrabiata” சிறுகதையைக் காளி என்ற பெயரில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். உலகின் சிறந்த காதல்களில் இதுவும் ஒன்று. கதை எழுதப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகிறது. இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள் க.நா.சு மொழியாக்கம் செய்துள்ள உலக எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்க்கும் போது அவரது ஆழ்ந்த பரந்த வாசிப்பின் ஆர்வமும் ரசனையும் புலப்படுகிறது. இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான ஒரு கதையைக் கூட …

கடலில் ஒரு காதல் Read More »

வீடில்லாதவர்கள்

ரஷ்யக் கரடிக் குடித்தனம் என்ற சிறார் கதை ஒன்றைத் தினமணி இணையத்தில் படித்தேன் சின்னஞ்சிறிய நாட்டுப்புறக் கதை. கண்முன்னே காட்சிகள் தோன்றி மறைகின்றன.குயவன் தவறவிட்டுச் சென்ற பானை ஒரு வீடாக மாறுகிறது. அந்தப் பானையைக் கரடி ஆக்கிரமித்துக் கொண்டவுடன் இருப்பிடம் பறிபோகிறது. இது சிறார் கதை மட்டுமில்லை. அதிகாரத்தின் இயல்பினைப் பற்றியது ••• பானைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒரு குயவர் செல்லும் போது வண்டியிலிருந்து ஒரு பானை தவறி கீழே விழுந்துவிடுகிறது. அந்தப் பானையைக் கண்ட ஈ …

வீடில்லாதவர்கள் Read More »

கடைசிக் குதிரைவண்டி

புதிய சிறுகதை கண்ணாயிரம் வீட்டின் பெரிய இரும்புக் கேட்டை ரகசியமாகத் தள்ளி அந்த இடைவெளியின் வழியே உள்ளே எட்டிப்பார்த்தார் சேர்மதுரை. குதிரை கண்ணில் படவில்லை. வாசலை ஒட்டி ஒரு இன்னோவா கார் நிற்பது மட்டும் தான் கண்ணில் தெரிந்தது. எக்கிக் கொண்டு பார்த்தபோது நாலைந்து பூச்செடிகளும் பைக் ஒன்றும் கண்ணில் பட்டது குதிரையை எங்கே கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று மாலை அவரது கடனுக்காகக் குதிரையைக் கண்ணாயிரத்தின் ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அந்த நேரம் சேர்மதுரை …

கடைசிக் குதிரைவண்டி Read More »

கி.ரா: நூற்றாண்டின் சாட்சியம்

இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியான கட்டுரை •• கி.ராஜநாராயணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க குரல் மட்டும் அல்ல; ஒரு நூற்றாண்டின் சாட்சியமும் அவர். தனது 98 வயதில் உற்சாகமாகப் புதிய நாவலை எழுதி வெளியிட்டார். அடுத்த மாதம் 99 வயதிலும் ஒரு புதிய நாவலை வெளியிடத் திட்டம் கொண்டிருந்தார். எழுத்துதான் அவரது ஒரே இயக்கம்; விருப்பம். வற்றாத ஜீவ ஊற்றுகளில் எப்போதும் நீர் சுரந்தபடியே இருக்கும் என்பார்கள். அப்படியானதுதான் கி.ரா.வின் எழுத்து வாழ்க்கை. “நான் பிறந்து …

கி.ரா: நூற்றாண்டின் சாட்சியம் Read More »

தேவகியின் தேர்

புதிய சிறுகதை “நம்ம கோவில் தேரைப் பார்க்க வந்திருக்கிறார். அவரைத் தேரடி முக்கு வரைக்கும் அழைச்சிட்டு போயிட்டு வா“ என்று ஹரியிடம் அப்பா சொன்ன போது அவன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தான். அம்மா தோசைக்கல்லை அப்போது தான் அடுப்பில் போட்டிருந்தாள். அம்மா மெதுவாகத் தான் தோசை சுடுவாள். அதுவும் அப்பாவிற்குச் சுடும்போது இடையில் வேறு யாரும் சாப்பிட வந்துவிடக்கூடாது. அப்பா சாப்பிட்டுமுடித்துப் போன பிறகு தான் மற்றவர்களுக்குச் சாப்பாடு அப்பா ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் நிர்வாகத்தைப் பார்க்கிறவர் என்பதால் அதிகாலையிலே …

தேவகியின் தேர் Read More »

கயிற்றின் முனை

அமெரிக்க எழுத்தாளரான கேதரின் ஆன் போர்ட்டர் எழுதிய, “கயிறு “என்ற சிறுகதையை க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கதையை எப்படித் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்தார் என்று வியப்பாகவே இருக்கிறது. க.நா.சுவின் ரசனையும் தேர்வும் அபாரமானது. இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று பலரும் அலட்சியமாக விலகிப் போய்விடச் செய்யும் கதையிது. ஆனால் கதையில் அந்தக் கயிறு ஒரு முக்கியமான குறியீடாக இருக்கிறது என்பதை க.நா.சு நன்றாக உணர்ந்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பின் வழியே கண்டறியும் வெளிச்சமது. கேதரின் ஆன் …

கயிற்றின் முனை Read More »

எனது அப்பா

ஐசக் அசிமோவ் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவ் தனது சொந்த தேசமான ரஷ்யாவை விட்டு அமெரிக்காவில் குடியேறியவர். 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் பேராசிரியராகப் பணியாற்றியவர். விஞ்ஞானத்தின் புதிய சாத்தியங்கள் பற்றியும் விண்வெளி மனிதர்கள், மற்றும் ரோபோ பற்றிய இவரது கதைகள் அறிவியல் புனைவிற்குப் புதிய தளத்தினை உருவாக்கியவை. அவர் தன் தந்தையைப் பற்றி எழுதிய சிறப்பான பதிவு. •• 1923 ஜனவரி எனது அப்பாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையான நாள். அதுவரை அவர் …

எனது அப்பா Read More »

எஸ்.ராவுடன் விடுமுறைக்காலம்

ஜனக், ரியா, தருணிகா மூவரும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்.சிறந்த நண்பர்கள். இந்த விடுமுறைக்காலத்தில் தினமும் புத்தகங்கள் படித்து வருகின்றனர்.கடந்த வாரம் எஸ்.ரா அவர்களின் புத்தகங்களை படித்து விமர்சனம் எழுதி உள்ளனர் என ரம்யா ரோஷன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு எனது நன்றி. ஜனக். ரியா, தருணிகா மூவருக்கும் என் அன்பும் நன்றியும். சிறப்பாக எழுதியிருப்பதற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள் ———————————————————- பெயர் :ஜனக் புத்தகம்: எலியின் பாஸ்வேர்டு விமர்சனம்: வணக்கம். என் பெயர் ஜனக் …

எஸ்.ராவுடன் விடுமுறைக்காலம் Read More »

ஹெமிங்வேயின் முகங்கள்

ஹெமிங்வேயின் மூன்று நாவல்களும் பதினைந்து சிறுகதைகளும் தமிழில் வெளியாகியுள்ளன. அவரது Death in the Afternoon A Moveable Feast கட்டுரைத் தொகுப்பு மற்றும் The Sun Also Rises. Green Hills of Africa போன்ற நாவல்கள் இதுவரை தமிழில் வெளியாகவில்லை. ஐம்பதுகளில் ஹெமிங்வே பற்றிய கவனமும் உரையாடலும் தமிழ் இலக்கிய வெளியில் அதிகமிருந்தது. சி.சு.செல்லப்பா தோற்காதவன் என்ற ஹெமிங்வே குறுநாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். இன்றைய தமிழ்ச் சூழலில் ஹெமிங்வேயை நினைவு கொள்பவர்கள் குறைவு. ஆனால் …

ஹெமிங்வேயின் முகங்கள் Read More »

படோல் பாபு – திரை நட்சத்திரம்

சத்யஜித் ரே நூற்றாண்டினை முன்னிட்டு அவரது மிகச்சிறந்த சிறுகதையை மீள்பிரசுரம் செய்கிறேன். இந்தக் கதை நாடகமாகவும் குறும்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீதர் நாராயணன். பதாகை இணைய இதழில் இந்த கதை வெளியாகியுள்ளது. ••• படோல் பாபு – திரை நட்சத்திரம் – சத்யஜித் ரே – (தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்) நன்றி : பதாகை நிஷிகாந்தா பாபு தெருவிலிருந்து அழைக்கும்போது படோல் பாபு சாமான்கள் நிறைந்த பையை தனது தோளில் மாட்டிக்கொண்டிருந்தான். …

படோல் பாபு – திரை நட்சத்திரம் Read More »