கதையே வாழ்க்கை
இடக்கை நாவல் குறித்த விமர்சனம். செ.ஆதிரை. இடக்கை நாவல் நூற்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்களையும், மன்னன்களின் அசுர வேட்டைகளையும், கொலைகளையும், அவர்களின் மன்னிப்புகளையும், மனித பசியின் கோரதாண்டவத்தையும், நீதி மறுக்கப்பட்டவர்கள், நீதி கேட்டு அலைவதையும், டெல்லி மாநகரைச் சுற்றி தெருத்தெருவாக அலைந்துதிரிந்து தெரிந்துகொண்டதுபோல் உள்ளது …. இதில் முதல் கதையே ஒளரங்கசீப்பைப் பற்றியது தான் …..தனக்கு எதிராக போர்த் தொடுக்க வரும் மன்னர்களை பயத்தில் தள்ள, அரசனுக்கு எதிரான போரில் தோற்ற வீரர்களின் 1000 நாக்குகளை …









